IPL Model Auction : அதிக கோடிக்கு ஏலம் போன ஆஸ்திரேலிய வீரர்

IPL Model Auction :

ஜியோ சினிமாஸ் நடத்திய ஐபிஎல் மாடல் ஏலத்தில் (IPL Model Auction) வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் :

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை துபாயில் நடைபெறவுள்ளது. முதன்முறையாக ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. மொத்தம் 333 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ள நிலையில், 10 அணிகளுக்கு 77 வீரர்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தேர்வு செய்யும் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான போலி ஏலம் (IPL Model Auction) ஜியோ சினிமாஸ் OTT தளத்தில் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் முன்னாள் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா, மும்பை அணிக்கு அனில் கும்ப்ளே, ஆர்சிபி அணிக்கு மைக் ஹெசன், பஞ்சாப் அணிக்கு அபினவ் முகுந்த், ராஜஸ்தான் அணிக்காக ஜாகிர் கான், கேகேஆர் அணிக்கு உத்தப்பா ஆகியோர்கள் பங்கேற்றனர்.

டெல்லி அணிக்காக ஆகாஷ் சோப்ரா, லக்னோ அணிக்காக ஆர்.பி.சிங், குஜராத் அணிக்காக பார்த்தீவ் படேல், ஹைதராபாத் அணிக்காக மோர்கன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போலி ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை அனைத்து அணிகளும் வாங்கியுள்ளன. அதன்படி ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை அதிகபட்சமாக ரூ.18.5 கோடிக்கு ஆர்சிபி வாங்கியுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதால், அவரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் தீவிரமாக களமிறங்கி உள்ளன. இதையடுத்து தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரர் ஜெரால்டு கோட்சேயை குஜராத் அணி ரூ.18 கோடி. இதையடுத்து பேட் கம்மின்ஸை ஐதராபாத் அணி ரூ.17.50 கோடிக்கும், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு பஞ்சாப் அணியும் வாங்கியது. மேலும் இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்கவை 10.5 கோடிக்கு KKR வாங்கியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை அணிக்காக பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply