iQOO Neo 9 Pro ஸ்மார்ட்போன் பிப்ரவரியில் இந்தியாவில் வெளியாகிறது

ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 9 ப்ரோ சிறப்பம்சங்கள் (iQOO Neo 9 Pro Specifications) :

  1. iQOO Neo 9 Pro Display : இந்த Neo 9 Pro வேரியண்ட்டில் 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. மேலும் இது 1.5K ரெசொலூஷன் கொண்ட எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. மேலும் இந்த நியோ போனுக்கு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் விஷன்ஓஎக்ஸ் விஎம்7 (Visionox VM7) விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) சப்போர்ட் கொண்டிருக்கிறது.  கேமிங் அனுபவத்தை மேம்படுத்த புதிதாக ஐக்யூ கியூ1 சிப் (iQOO Q1) பயன்படுத்தப்பட்டுள்ளது.

  2. iQOO Neo 9 Pro Camera : இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 4.0 (OriginOS 4.0) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ் 920 (Sony IMX 920) சென்சாருடன் 50MB மெயின் கேமரா + 8MB அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அதோடு சாம்சங் (Samsung) சென்சார் கொண்ட 16MB செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும்.

  3. iQOO Neo 9 Pro Battery & Storage : இந்த ஐக்யூ நியோ போனில் கேமராவை போலவே பேட்டரியும் பக்காவாக வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 12GB RAM + 256GB மெமரி, 16GB RAM + 256GB  மெமரி மற்றும் 16GB RAM + 512GB  மெமரி கொண்ட மூன்று வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் 16GB RAM + 1TB  மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. இந்த போன் கேமிங் வேரியண்ட் என்பதால் எக்ஸ்ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor) வருகிறது. அதேபோல ரிமோட் கன்ட்ரோலுக்காக ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கொடுக்கப்பட்டுள்ளது.

  4. iQOO Neo 9 Pro Rate : இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் 12GB RAM + 256GB  மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,800/- ஆக நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த போன் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் ஐக்யூ நிறுவனம் தேதியை குறிப்பிடவில்லை.

Latest Slideshows

Leave a Reply