Iraivan Movie Review : இறைவன் படத்தின் திரைவிமர்சனம்

அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை (Iraivan Movie Review) பெற்று வருகிறது.

ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக வெளிவந்த ஜெயம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை ரவியின் தம்பி ராஜா இயக்கியிருந்தார். அதன் பிறகு ரவியின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தன. ஜெயம் ரவி தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் தெளிவாக இருக்கிறார். கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி சோழனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். இரண்டு பாகங்களாக வெளிவந்த இப்படத்தில் ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் ஐ.அகமது இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ள இறைவன் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், விஜயலக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கட்ட ‘இறைவன்’ எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதை தற்போது விமர்சனத்தில் (Iraivan Movie Review) காணலாம்.

கதைக்களம் :

சைக்கோ கொலையாளி பிரம்மா [ராகுல் போஸ்] இளம் பெண்களைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொன்றுவிடுகிறார். ஏறக்குறைய 12 பெண்களை இதே முறையில் சித்திரவதை செய்து கொன்று வருகிறார். போலீஸ் அதிகாரியான அர்ஜுன் [ஜெயம் ரவி] மற்றும் அவரது நண்பர் ஆண்ட்ரூ [நரேன்] இருவரும் இணைந்து இதை விசாரித்து எப்படியோ சைக்கோ கொலையாளி பிரம்மாவை பிடிக்கிறார்கள். இதில் நரேன் இறந்து விடுகிறார். ஜெயம் ரவி பிரம்மா சிறைக்கு செல்ல, தனது நண்பரை இழந்த பிறகு போலீஸ் வேலையை விட்டு வெளியேறுகிறார். சில மாதங்கள் கடக்க மீண்டும் ஒரு அதிர்ச்சியாக பிரம்மா காவல் துறையினரிடன் இருந்து தப்பித்து விட்டார் என தெரியவருகிறது. இதன்பின் நடந்தது என்ன, கொலைகள் மீண்டும் தொடரப்பட்டதா? இதனால் ஜெயம்ரவி சந்தித்த இன்னல்கள் எல்லாம் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதையாகும்.

Iraivan Movie Review :

Iraivan Movie Review : ஹீரோ ஜெயம் ரவி ஏற்கனவே பல போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும், இறைவன் படத்தில் வரும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சற்று வித்தியாசமாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். போலீஸ் என்றால் சில விதிகளை மீறக்கூடாது, ஆனால் அவருக்கு விதிகள் இல்லை, ‘தவறு செய்தவனை கடவுள் தண்டிக்கும் வரை நான் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன்’ என இரக்கமற்ற காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார். வில்லன் மூலம் அவர் அனுபவிக்கும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். ஹீரோயின் நயன்தாராவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை. ராகுல் போஸ் தனது நடிப்பை சிறப்பாக நடித்துள்ளார். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு உள்ளது. அதேபோல் வினோத் கிஷன் நடிப்பும் பட்டையை கிளப்பியது.

சார்லி சில காட்சிகளில் வந்தாலும், அவர் நடிப்பில் அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக மகளின் மரணத்தின் போது மருத்துவமனையில் அவர் செய்த நடிப்பு, அது சில நொடிகள்தான் என்றால் கூட, நம்மை கலங்க வைத்து விட்டது. அழகம் பெருமாள், ஆசிஷ் வித்யார்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இயக்குனர் ஐ.அகமதுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஹாலிவுட் தரத்தில் படம் கொடுத்திருக்கிறார். ஆனால் நொடிக்கு நொடி த்ரில் செய்ததா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். ஒவ்வொரு காட்சியின் அமைப்பும் பக்காவாக இருந்தாலும், திரைக்கதை வலுவாக இல்லை. அடுத்து என்ன என்று யோசிக்க வைப்பார்கள் என்று பார்த்தால் பல இடங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பார்வையாளர்களை மனதளவில் தொந்தரவு செய்யும் காட்சிகள் மட்டுமே இருந்தன. உணர்வுபூர்வமாக இணைக்கப்படவில்லை. இது படத்திற்கு முக்கிய மைனஸ் பாயிண்டாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அதேபோல ஹரியின் ஒளிப்பதிவும் மிரட்டுகிறது. மொத்தத்தில் படத்தை (Iraivan Movie Review) தியேட்டரில் போய் பார்க்கக்கூடிய அளவிற்கு உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply