IRCTC Super Mobile App : ரயில் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி சூப்பர் ஆப்ஸ் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது

இந்திய ரயில் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering And Tourism Corporation) அமைப்பானது ஐஆர்சிடிசி சூப்பர் ஆப்ஸ் (IRCTC Super Mobile App) என்ற பெயருடன் புதிய வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியாவின் முக்கியமான போக்குவரத்து பயண சேவையாக மிக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் சேவை என்றால் அது ரயில் சேவை தான். தினமும் நூற்றுக்கணக்கான மக்களின் பயணம் இந்திய ரயில்வே சேவையை நம்பியே இருக்கிறது. இந்தியன் ரயில்வே IRCTC என பெயர் மாற்றப்பட்ட பிறகு மலிவு விலையில் போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் பயணத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை IRCTC தற்போது எடுத்து வருகிறது.

ஐஆர்சிடிசி சூப்பர் ஆப்ஸ் அறிமுகம் (IRCTC Super Mobile App)

இதற்கு முன்னர் IRCTC-யின் மூலம் டிக்கெட் முன் பதிவு செய்ய தனி ஆப்ஸ் மற்றும் ரயில் தொடர்பான சேவைகளை அறிவதற்கு ஒரு ஆப்ஸ் என இரண்டு மொபைல் ஆப்ஸ்களை வைத்திருந்த IRCTC தற்போது இந்தியன் ரயில்வே தொடர்பான அனைத்து வசதிகளையும் ஒரே ஆப்ஸ் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக IRCTC அமைப்பு தற்போது IRCTC Super Mobile App என்ற புதிய மொபைல் ஆப்ஸை இந்த மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஐஆர்சிடிசி சூப்பர் ஆப்ஸின் பயன்கள்

ரயில் டிக்கெட் புக்கிங், கார்கோ புக்கிங், பயணிகளின் பெயர் பதிவு (PNR) ஸ்டேட்டஸ் செக் செய்வது, ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்வது, ரயிலின் லைவ் லொகேஷன் போன்ற பல சேவைகளை ஒரே இடத்தில் இந்த IRCTC Super Mobile App வழங்கவுள்ளது. மேலும் இந்த ஆப்ஸின் தனி சிறப்பாக ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் (Unreserved Train Ticket) மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் (Reserved Train Ticket) போன்ற அனைத்து டிக்கெட்களையும் இனி ஐஆர்சிடிசி சூப்பர் மொபைல் ஆப்ஸில் வாங்கி பயன்பெறலாம். இதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதற்கு சிறந்த பேக்கேஜ்களை IRCTC Super Mobile App மூலமாக இனி நேரடியாக பயன்படுத்தலாம் எனவும், இந்த ஆப்ஸ் இன்னும் 2 வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் எனவும் இந்தியன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply