Ireland 1st Victory : ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி

துபாய் :

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி முதல் டெஸ்ட் வெற்றியை (Ireland 1st Victory) பதிவு செய்தது. இதன் மூலம் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற சிறந்த டெஸ்ட் அணிகளால் கூட ஆரம்ப காலத்தில் செய்ய முடியாத சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அயர்லாந்து இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெற்றது. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணியை டெஸ்டில் வீழ்த்தி இருந்தது. எனவே, பதிலடி கொடுக்கக் காத்திருந்தது அயர்லாந்து அணி. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அயர்லாந்தின் மார்க் அடயார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Ireland 1st Victory :

அடுத்து பேட் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 52, கர்டிஸ் 49, லோர்கன் டக்கர் 46 ரன்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தானின் ஜியா உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின், 108 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 218 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி 111 ரன்களை இலக்காக வைத்தது. இந்த சேஸிங்கில் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போதிலும் தொடக்க ஆட்டக்காரர் ஆன்டி பல்பிர்னி 58 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அயர்லாந்து தனது எட்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை (Ireland 1st Victory) பதிவு செய்தது. இது அவர்களின் முதல் டெஸ்டில் வெற்றிபெற குறைந்த போட்டிகளை எடுத்த அணிகளின் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. இந்த பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ய 25 போட்டிகள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா 12 போட்டிகளிலும், நியூசிலாந்து 45 போட்டிகளிலும் எடுத்துள்ளன. அந்த வகையில் அயர்லாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் (Ireland 1st Victory) முத்திரை பதித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply