Irugapatru Movie Review: இருகப்பற்று படத்தின் திரைவிமர்சனம்

Irugapatru Movie Review: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐய்யப்பன், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் “இருகப்பற்று”. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி (நேற்று) உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இருகப்பற்று திரைப்பட விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

படத்தின் மையக்கருத்து

காலங்கள் மாறிவிட்ட இவ்வுலகில் காதல் எவ்வளவு எளிது என்ற நிலையை அடைந்து விட்டதோ, அதே போல் பிரேக் அப், விவாகரத்து உள்ளிட்ட சம்பவங்களும் சர்வ சாதாரணமாகிவிட்டன. வார்த்தைப் போர், உடல் ரீதியான தாக்குதல்கள், தம்பதிகளுக்குள் சண்டை இருப்பது எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லி விவாகரத்து கோருபவர்கள் போன்ற செய்திகளை அன்றாடம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இதற்கெல்லாம் “இருகப்பற்று ” திரைப்படம் மிக அழகாக பதில் சொல்லியிருக்கிறது.

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா அய்யப்பன் ஆகியோர் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் வாழும் தம்பதிகள் ஆவார். திருமண பிரிவு பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராக வரும் ஷ்ரத்தாவுடன் கணவர் விக்ரம் பிரபுவுக்கு சண்டையே வந்தது இல்லை. திருமணத்திற்குப் பிறகு, மனநல மருத்துவராக வரும் ஷ்ரத்தாவை சந்திக்கும் பிரச்சனைகள், மனைவி காதலிக்கவில்லை, கணவனுக்கு அவள் பார்வை பிடிக்கவில்லை, என் மனைவி முன்பு போல் அழகாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் எல்லா கதைகளையும் கேட்கும் பொருட்டு, ஷ்ரத்தா விக்ரம் பிரபுவின் திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் வருமா என்று பார்க்க வாரத்திற்கு ஒரு சிகிச்சை வகுப்பைக் கேட்கிறார். இப்படிப் போகும் கதையில் டச்சிங்கான வசனங்கள், விட்டுக் கொடுக்கும் பிரச்சனை என பலவிதமான சண்டைகளால் ஏற்படும் சண்டைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் யுவராஜ்.

ஐடியில் பணிபுரியும் விதார்த் மற்றும் அபர்ணதியும் திருமணம் செய்துகொண்டு பிறகு அபர்ணதிக்கு குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு அவரது உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகிறார். மேலும், மனைவி பேசும் போது வாய் துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறி அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார் விதார்த். காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியான ஸ்ரீ மற்றும் சானியா, திருமணத்திற்குப் பின்னரான அழுத்தத்தால் தங்களுடைய காதலையே மறந்து பிரியும் எண்ணத்தில் இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்த ஜோடிகளின் நிலை என்ன ஆனது என்பதே இந்த படத்தின் கதை ஆகும்.

படத்தின் திரைவிமர்சனம் (Irugapatru Movie Review)

Irugapatru Movie Review: விக்ரம் பிரபுவுக்கு மட்டுமின்றி, தொடர் தோல்வியால் தவித்த விதார்த், ஸ்ரீ ஆகியோருக்கும் இப்படம் கம்பேக் கொடுத்துள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா அய்யப்பன் என 3 ஹீரோயின்கள் கொடுத்த கேரக்டரை ஹீரோவுக்கு சளைக்காமல் செய்திருக்கிறார்கள். இப்படத்தில் 3 ஜோடிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளில் நம்மை நாமே அவர்களின் கேரக்டர்களில் பார்க்கலாம் என்பதால் இயக்குனர் யுவராஜ் தயாளன் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் வெற்றி பெற்றுள்ளது.

காதல், உணர்ச்சிகள், விட்டுக்கொடுப்பு தன்மை, அனுசரிப்பு என எல்லாவிதமான காட்சிகளையும் இந்தப் படம் காட்டியிருக்கிறது. இந்தப் படத்தில் வரும் சில காட்சிகள் திருமண வாழ்க்கையைத் தாண்டி நண்பர்களுக்கும் ஏற்றது. இந்தப் படத்தைப் பார்க்கும் எவருக்கும் நாமும் இந்த மாதிரியான ஈகோ விஷயங்களை நம் வாழ்வில் செய்திருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுகிறது. அந்த நபரிடம் உடனடியாக ஒரு Sorry- யாவது கேட்கனும் என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இந்தப் படம் பார்த்து விட்டு வந்ததும் 10 நிமிடமாவது படத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவோம். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மை இணைக்கிறது. நல்ல ஒளிப்பதிவு, நல்ல இயக்கம் மற்றும் படக்குழுவினருக்கும் இயக்குநருக்கும் வாழ்த்துக்கள்.

Latest Slideshows

Leave a Reply