Ishan Kishan Won Man Of The Match Award: தோனியின் ரெக்கார்டை சமன் செய்த இஷான் கிஷன்...

Ishan Kishan Won Man Of The Match Award :

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் தொடர் நாயகன் விருது. இவர் மூன்று ஒரு நாள் போட்டியிலும் அரை சதம் விளாசினார். இதன் மூலம் முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் ரெக்கார்டை இவர் சமன் செய்துள்ளார்.

தொடர் நாயகன் விருது :

இந்திய அணி வெறும் இளம் வீரர்களைக் கொண்டு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் வெற்றி மிகவும் கொண்டாடப்பட வேண்டியது. அதுமட்டுமல்லாமல் இந்த தொடரின் மூலம் பல்வேறு இளம் ஹீரோக்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். குறிப்பாக முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், கில் ஆகிய ஒரு நாட்டம் சிறப்பாக அமைந்தது மட்டுமல்லாமல் இந்திய அணிக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அருமையாக விளையாடி இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் சிறப்பான தொடராக அமைந்தது. இந்திய அணி இரண்டாவது போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதே இளம் வீரர்களின் நம்பி கடைசி போட்டியிலும் களம் இறக்கியது. கடைசிப் போட்டியில் அவர் 77 ரன்கள் விளாசி அசத்தினார். இவர் மொத்தமாக மூன்று போட்டிகளில் 184 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.

ஹாட்ரிக் அரைசதம் :

இது மட்டுமல்லாமல் மற்றொரு சிறப்பான சாதனையும் இவர் படைத்துள்ளார். இதுவரை மூன்று போட்டியில் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இணைந்துள்ளார். ஏற்கனவே மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்த பட்டியலில் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் விளையாடிய போது தோனி மூன்று அரை சதம் அடித்தார். அந்தத் தொடரில் தோனியை இறுதிவரை ஆஸ்திரேலியா அணி பவுலர்களால் விக்கெட் செய்ய முடியவில்லை. இதேபோன்று நியூசிலாந்து தொடரின் போது ஐயர் இந்த சாதனை படைத்திருந்தார். இந்தப் பட்டியலில் இஷான் கிஷன் இணைந்து இருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Slideshows

Leave a Reply