Ishan kishan : சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷான் தேர்வானது ஏன்?

உலகக் கோப்பை அணி - Ishan kishan:

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தை மூத்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா ஆகிய 18 வீரர்களில் எஞ்சிய 15 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக Ishan kishan தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உலக கோப்பை அணி குறித்தும், சஞ்சு சாம்சன் விவகாரம் குறித்தும் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

Ishan kishan, சஞ்சு சாம்சன் இடையே போட்டி இல்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியை தேர்வு செய்யும் போதும், விக்கெட் கீப்பரை தேர்வு செய்கின்றனர். எனவே அவர் விக்கெட் கீப்பர், மாற்று தொடக்க ஆட்டக்காரர் மற்றும் மாற்று மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் என பல பாத்திரங்களை வகித்து வருகிறார்.

அதேபோல் மிடில் ஆர்டரில் தோற்றுவிடுவார் என பலரும் கூறிய நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அழுத்தத்தில் அவர் தன்னை நிரூபித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ishan kishan. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த பிறகும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை அவர் ஒருநாள் கிரிக்கெட்டின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவரால் தொடர்ந்து ரன் சேர்க்க முடிகிறது. தனது ஆட்டத்தை மாற்ற முயற்சிக்காமல் விளையாடினால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறலாம் என்றார்.

Latest Slideshows

Leave a Reply