Israel Army Opened Fire On Gaza People : இஸ்ரேல் ராணுவம் உணவுக்காக காத்திருந்த அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளியது

இஸ்ரேல் ராணுவப் படைகள் கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக காசா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி காசாவின் பல்வேறு பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. காசாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் இதுவரை போர் காரணமாக காசாவில் 21 ஆயிரம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்பட 30 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து உள்ளது. ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகள் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையை (Israel Army Opened Fire On Gaza People) சுட்டிக் காட்டி போரை நிறுத்த அறிவுறுத்தியும் இஸ்ரேல் போரை கைவிடுவதாக இல்லை. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் படையினரை அழிக்காமல் ஓயமாட்டோம் என சூளுரைத்துள்ளார்.

காசா பகுதி மக்கள் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர் :

இந்த போரால் காசா பகுதி கடும் உணவு தட்டுப்பாட்டில் தவிக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஆனது தாறுமாறாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் வாங்க முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒரு கிலோ சர்க்கரை 1,860 ரூபாய் முதல் 2,320 ரூபாய், ஒரு கிலோ ஈஸ்ட் 2,500 ரூபாய், 3 முட்டைகள் 250 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் 70 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. சண்டை போட்டு கொண்டு கிடைக்கும் உணவுப் பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான காசா பகுதி மக்கள் வாங்க முடியாமல் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.

Israel Army Opened Fire On Gaza People - உணவுக்காக காத்திருந்த அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் :

உணவுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உணவு கொடுக்க வந்த லாரியை சூழ்ந்துகொண்டனர். திடீரென அவர்கள் மீது இஸ்ரேல் இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் 150 பாலஸ்தீனியர்கள் (Israel Army Opened Fire On Gaza People) கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்தனர் என்று பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உதவி பெற காத்திருந்த அப்பாவி மக்கள் இஸ்ரேல் ராணுவம் சுட்டுத் தள்ளி கொல்லப்பட்ட காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது மற்றும் உலக அளவில் மனதை உலுக்கும் (Israel Army Opened Fire On Gaza People) விதமாக அமைந்துள்ளது. மேலும் காசா பகுதி மருத்துவமனையில் படுகாயம் அடைந்த மக்கள் சிகிச்சை பெற இடம் இல்லாமல் அல்லாடுகிறார்கள்.

பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் சர்வதேச நாடுகளுக்கு போர் நிறுத்த அழைப்பு விடுத்துள்ளது :

பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தத் தாக்குதல் ஆனது இஸ்ரேலின் இனப் படுகொலைப் போரின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தான் மீதமுள்ள அப்பாவி பொது மக்களைப் பாதுகாக்க ஒரே தீர்வு என்றும், சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிட வேண்டுமென சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் தங்கள் படையினர் ஆபத்தில் இருப்பதாக நம்பியதால் காசா மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply