Israel vs Hamas : ஹமாஸின் கமாண்டோ படைகளின் முக்கிய தளபதிகளை கொன்றதாக IDF கூறியது

Israel vs Hamas :

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் (Israel vs Hamas) 15/10/2023 இன்று ஞாயிற்றுக்கிழமை அதன் ஒன்பதாவது நாளில் நுழைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த தாக்குதல்கள் ஹமாஸின் செயல்பாட்டுத் திறனை முடக்குவதற்கும், இஸ்ரேலிய பிரதேசத்தில் தாக்குதல்களை நடத்தும் அவர்களின் திறனை சீர்குலைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டதாக IDF கூறியது.

Israel vs Hamas : இந்த தாக்குதலால் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் திறன்கள் பாதிக்கப்பட்டன மற்றும் அதன் செயல்பாட்டு கட்டளை மையங்கள், இராணுவ வளாகங்கள், ஏவுகணைகள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்காணிப்பு நிலைகள்  உட்பட 100க்கும் மேற்பட்ட இலக்குகள் ஒரே இரவில் IDF-ஆல் தாக்கப்பட்டு உள்ளன. காசா மற்றும் இஸ்ரேல் இரண்டிலும் 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேலிய எல்லைக் கிராமங்களான Nirim மற்றும் Nir Oz மீதான கொலைவெறித் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய ஹமாஸின் கமாண்டோ படை தளபதி பிலால் அல்-கேத்ரா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் இராணுவ புலனாய்வு இயக்குநரகத்தின் உளவுத்துறை முயற்சிகளைத் தொடர்ந்து வான்வழித் தாக்குதலில்  பிலால் அல்-கேத்ரா கொல்லப்பட்டதாக IDF கூறுகிறது. “Nirim மற்றும் Nir Oz-ஸில் நடந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பிலால் அல்-கேத்ராதான் காரணம்” என்று IDF கூறுகிறது..

பிலால் அல்-கேத்ரா 2005 ஆம் ஆண்டு இஸ்ரேலிய குடிமக்களை கடத்தி கொலை செய்ததற்காக காதி இஸ்ரேலால் கைது செய்யப்பட்டதாகவும், 2011 கிலாட் ஷாலித் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக காசா பகுதிக்கு விடுவிக்கப்பட்டதாகவும் IDF கூறியது. இஸ்ரேல் சமூகங்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய ஹமாஸின் கமாண்டோ படைகளில் மற்றொரு தளபதி அலி காதி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். மேலும் பல ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் காசா பகுதியில் ஒரே இரவில் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக IDF கூறுகிறது. “இஸ்லாமிக் ஜிஹாத் பயங்கரவாத அமைப்பிற்கு” சொந்தமான செயல்பாட்டு கட்டளை மையங்களும் இஸ்ரேலிய விமானப்படையால் குறிவைக்கப்பட்டன.

IDF போர் விமானங்கள், Shin Bet Security Agency-ன் வழிகாட்டுதலின் கீழ், காசா பகுதியில் நேற்று இரவு ஏவுகணைகளை வீசியுள்ளது. வடக்கு காசா மீது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசியுள்ளது. Zaytun, Khan Yunis மற்றும் West Jabaliya ஆகிய இடங்களில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது. இஸ்ரேலிய துருப்புக்கள் காசா பகுதியை சுற்றி வளைத்ததால் “உள்ளூர்” சோதனைகளும் நடந்துள்ளன.

Israel vs Hamas : “இராணுவ அதிகரிப்பு – Military Escalation”, “காசாவில் பாதுகாப்பற்ற குடிமக்களுக்கு அச்சுறுத்தல் – Threat To Defenceless Civilians In Gaza” ஆகியவற்றை தீர்க்க மற்றும் இஸ்ரேல்-காசா போரைப் பற்றி விவாதிக்க சவூதி அரேபியாவின் Organisation Of Islamic Cooperation (OIC) ஆனது “அவசர அசாதாரண கூட்டத்திற்கு – Urgent Extraordinary Meeting” அழைப்பு விடுத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply