ISRO HFSC Recruitment 2024 : இஸ்ரோவில் மருத்துவ அதிகாரி காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவில் (Indian Space Research Organisation) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் விஞ்ஞான பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ISRO HFSC Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இஸ்ரோவில் இந்த HFSC பணியிடங்களுக்கு (ISRO HFSC Recruitment 2024) தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு 32 காலிப்பணியிடங்களும், மருத்துவ அதிகாரிகள் பதவிக்கு 48 காலிப்பணியிடங்களும், விஞ்ஞான பொறியாளர் பதவிக்கு 23 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 103 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வி தகுதி (Educational Qualification) : இஸ்ரோவில் இந்த HFSC பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் MBBS பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டு வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் விஞ்ஞான பொறியாளர் பதவிக்கு M.E, M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

  3. வயது தகுதி (Age) : இஸ்ரோவில் இந்த HFSC பதவிக்கு 18 வயது முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : இஸ்ரோவில் இந்த HFSC பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21700/- முதல் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இஸ்ரோவில் இந்த HFSC பதவிக்கு முதல்கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இஸ்ரோவில் இந்த HFSC பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.hsfc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

  7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இஸ்ரோவில் இந்த HFSC பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.10.2024 ஆகும்.

Latest Slideshows

Leave a Reply