ISRO Launch Proba-3 Mission : இஸ்ரோ புரோபா-3 செயற்கைக்கோளை டிசம்பர் 4-ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது

சூரியனை பற்றி முழுவதும் ஆய்வு செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் தயாரித்துள்ள புரோபா-3 (Proba-3) என்ற நவீன செயற்கைக்கோளை வரும் டிசம்பர் 4-ம் தேதி இஸ்ரோ (ISRO Launch Proba-3 Mission) விண்ணில் செலுத்துகிறது. மேலும் இந்த புரோபா-3 விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் உள்ள கொரோனல் (Coronal) எனும் பகுதியை ஆய்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரோபா-3 செயற்கைகோள் (ISRO Launch Proba-3 Mission)

இந்த பிரபஞ்சத்தில் மனித இனம் உயிர் வாழ்வதற்கு சூரியன் மிகவும் அவசியமானதாகும். மேலும் வரும் காலங்களில் மனித இனம் அழிவுக்கு சூரியன்தான் காரணமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இதனால் சூரியனை பற்றிய ஆராய்ச்சியானது (ISRO Launch Proba-3 Mission) முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சூரியனின் மேற்புறத்தில் கொரோனல் (Coronal) என்னும் பகுதி உள்ளது. இங்கிருந்துதான் சூரிய காந்தப்புயல் உருவாகிறது. சிறிய அளவிலான புயல்கள் பூமியை தாக்கினால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

ஆனால் பெரிய புயலாக இருந்தால் தற்போது நாம் பயன்படுத்தி வரும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும். இதுபோன்று மிகவும் சக்தி வாய்ந்த காந்தப்புயல் கடந்த 1859-ம் ஆண்டு பூமியை தாக்கியது. இதனால் அப்போது இருந்த தந்தி தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த சேவைகள் அனைத்தும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நீண்ட காலம் ஆனது. தற்போது இதுபோன்ற புயல் பூமியை தாக்கினால் செயற்கைகோள், கணினி, செல்போன் சேவை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும்.    

இன்றைய உலகில் அணு உலைகள் எலக்ட்ரானிக் சாதனங்களினால் பாதுக்கப்பட்டு வருகிறது. எனவே வரும் காலங்களில் எந்த வித பேரழிவும் ஏற்படக்கூடாது என்பதால் சூரிய காந்தப்புயலை முன்கூட்டியே கணிக்கவும், அதைப்பற்றி புரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சியின் முதல் கட்டமாகத்தான் புரோபா-3 செயற்கைகோள் (ISRO Launch Proba-3 Mission) ஏவப்பட உள்ளது. இதற்கு முன் சூரியனை ஆய்வு செய்வதற்கு ஏராளமான செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் இந்த புரோபா-3 செயற்கைகோள் வித்தியாசமானதாகும்.

உலகின் முதல் இணை செயற்கைக்கோள்

இந்த புரோபா-3 மிஷன் என்பது இரண்டு செயற்கைக்கோள்களின் தொகுப்பாகும். இதில் முதலில் ஒரு செயற்கைக்கோள் முன்னேயும், மற்றொரு செயற்கைக்கோள் 150மீ தூரத்தில் பின்னேயும் சூரியனை சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எந்த நாடும் இரட்டை செயற்கைக்கோள்களை ஏவியதில்லை.     

இதுபற்றி ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது சூரியனின் மேற்பகுதியில் வெப்பம் எப்போதும் அதிகமாக இருக்கும். இதனால் அந்த பகுதியை ஆய்வு செய்வது என்பது கடினமான பணியாகும். சூரிய கிரகணம் நிகழும்போது சூரியனின் மேற்புறத்தை சற்று எளிமையாக பார்க்கலாம். இந்த யோசனையை வைத்துதான் நாங்கள் இரண்டு (ISRO Launch Proba-3 Mission) செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளோம். இதில் முதல் செயற்கைக்கோள் சூரியனை மறைக்கும். இதனால் பின்னால் இருக்கும் செயற்கைக்கோளுக்கு சூரியனின் மேற்பகுதியானது தெளிவாக தெரியும். இதை வைத்து தான் நாங்கள் சூரியனை ஆய்வு செய்ய உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply