ISRO Next Mission : இஸ்ரோவின் அடுத்த லட்சியத் திட்டம்

ISRO Next Mission :

சந்திரனின் தென் துருவ பகுதியில்  இஸ்ரோவின் லேண்டர் தரையிறங்கி சிவசக்தி பாயிண்ட்-ல் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று இஸ்ரோ விண்வெளி நிறுவனம் (ISRO Next Mission) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பூமிக்கு அருகில் உள்ள “பென்னு” என்ற சிறுகோளில் இருந்து முதல் மாதிரிகளை பெறுவதில் நாசா விண்வெளி நிறுவனம் வெற்றி பெற்றது. இது அதன் OSIRIS-REx என்ற விண்கலத்தால் செயல்படுத்தப்பட்டது. இது தனது 7 வருட பயணத்தை முடித்த பின்னர் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.

இதுவரை சந்திரயான்-3 இன் அனைத்து பணிகளும் நிலவின் மேற்பரப்பு, மண் மற்றும் பாறை மாதிரிகளை அதன் பேலோடு கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளன. நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இஸ்ரோ விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (எஸ்ஏசி) இயக்குனர் திரு.நிலேஷ் தேசாய் கூறுகையில் “இஸ்ரோ இப்போது ஒரு பெரிய லட்சியத் பணியைத் திட்டமிட்டுள்ளது. அதில் சிவசக்தி புள்ளியில் இருந்து பாறை அல்லது மண் மாதிரிகளை சேகரித்து பின்னர் அதை பூமிக்கு கொண்டு வருவதற்கு (ISRO Next Mission) திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சவாலான பணியை எங்களால் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் செய்ய முடியும் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

முதன்மையாக இந்தப் பணியில்  லேண்டர் தொகுதி, டிரான்ஸ்வர் தொகுதி, அசெண்டர் தொகுதி மற்றும் ரீ-என்டரி தொகுதிகள் என 4 தொகுதிகள் இருக்கும். இதை செயல்படுத்துவதற்கு 2 தனித்தனி ராக்கெட் தேவைப்படும். ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (GSLV) Mark -II  ராக்கெட்டில் டிரான்ஸ்வர் மற்றும் ரீ-என்டரி தொகுதிகள் பயன்படுத்தப்படும். அதேசமயம், போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (PSLV) Mark-III ராக்கெட்டில் அசெண்டர் தொகுதி மற்றும் லேண்டர் தொகுதிகள் பயன்படுத்தப்படும் என்றார்.

இப்பொது இருக்கும் மிஷன் டிசைன் படி ‘சிவசக்தி புள்ளியில் ரோபோடிக் ஆர்ம் மெக்கானிசம் பயன்படுத்தி மண் மாதிரிகள் சேகரிக்கப்படும்’. மாதிரிகள் முதலில் அசெண்டர் தொகுதிக்கு மாற்றப்படும். பிறகு அசெண்டர் தொகுதி சந்திர மேற்பரப்பில் இருந்து புறப்பட்டு அது டிரான்ஸ்வர் தொகுதியுடன் இணைக்கப்படும். மேலும் இங்கே மற்றொரு ரோபோடிக் ஆர்ம் பயன்படுத்தி அசெண்டர் தொகுதியிலிருந்து ரீ-என்டரி தொகுதிக்கு மாதிரிகள் மாற்றப்படும். கடைசியாக டிரான்ஸ்வர் மற்றும் ரீ-என்டரி தொகுதி பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்படும் என்று கூறினார். சந்திரயான்-3 யை போலவே LSRM ஆனது ஒரு சந்திர நாளுக்கு (14 பூமி நாட்கள்) திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2028-ம் ஆண்டு இந்த மிஷன் (ISRO Next Mission) ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply