ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது

சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 போன்ற திட்டங்களை இஸ்ரோ சிறப்பாக செய்தது. இதனை தொடர்ந்து 7 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி பொதுமக்களின் மொபைல் போனுக்கு நேவிகேஷன் (ISRO Provide Navigation Signal) என்னும்  வழிகாட்டுதல் சேவையை வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விண்வெளித்துறையின் இன்ஸ்பேஸ் தலைவர் திரு. பவன் கோயங்கா அவர்கள் கூறியதாவது நேவிகேஷன் தகவல் பொதுமக்களுக்கு  எளிதில் கிடைக்கும் வகையில் இந்தியா தனது சொந்த நேவிகேஷன் அமைப்பை உருவாக்குவதற்கு இஸ்ரோ பணியாற்றி வருகிறது என தெரிவித்துள்ளார்.         

மேலும் அவர் கூறியதாவது இதற்கு தேவையான புதிய 7 நேவிகேஷன் செயற்கைகோள்களை விரைவில் (ISRO Provide Navigation Signal) நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். மேலும் இந்த 7 செயற்கைகோளில் ஒரு செயற்கைகோளானது ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 6 செயற்கைக்கோள்கள் விரைவில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார்.

நேவிகேஷன் (ISRO Provide Navigation Signal)

இஸ்ரோவின் நேவிக் அமைப்பு மற்ற நேவிகேஷன் அமைப்புகளை விட மிக துல்லியமாக செயல்படும் எனவும் இதன் பயன் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் (ISRO Provide Navigation Signal) என்ற நோக்கத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது என தெரிவித்தார். மேலும் இஸ்ரோவின் அடுத்த திட்டம் விண்வெளி  சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பதுதான். தற்போது இதற்கு தேவையான சட்ட வரைவுகளை தயாரித்து வருகிறோம் இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும் என தெரிவித்தார்.     

உலக அளவில் சிறு செயற்கைகோளுக்கான சந்தை 5.2 பில்லியன் டாலர் என்ற செலவில் உள்ளது. இதில் பெரும் பங்கை இஸ்ரோ கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக சிறிய ராக்கெட்டான SSLV உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இருந்து சிறிய வகை செயற்கைக்கோள் (ISRO Provide Navigation Signal) மற்றும் ராக்கெட்டுகள் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதிய பல்கலைகழகம்

விண்வெளி துறையின் மீது தற்போது இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்காக விண்வெளி துறையில் முழுநேரப் பட்டப்படிப்பை கொண்டு வருவதற்கு புதிய பல்கலைகழகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என திரு. பவன் கோயங்கா தெரிவித்தார்.

தள்ளிப்போகும் ககன்யான் திட்டம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் (Gaganyan Project) வரும் 2026-ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் திரு. சோமநாத் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு பிரதமர் மோடி விண்வெளிக்கு செல்ல இருக்கும் 4 வீரர்களை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தி வைத்தார். இவர்கள் 4 பேருக்கும் ரஷ்யாவில் 6 வருடமாக பல்வேறு பயிற்சிகள் தீவிரமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ககன்யான் திட்டம் 2026 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply