ISRO Research For Human Extraterrestrials : மனிதர்களை வேற்று கிரகங்களில் குடியேற்றம் செய்வதற்கான ஆராய்ச்சியை தொடங்கியது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (Indian Space Research Organisation) பூமியில் மட்டுமே வாழும் மனிதர்களை வேற்று கிரகங்களில் குடியேற்றம் செய்வதற்கான சோதனைகளில் தற்போது இறங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியின் முதல் கட்டமாக மனிதர்கள் வேற்று கிரகங்களில் தங்குவதற்கான (ISRO Research For Human Extraterrestrials) குடில்களின் சோதனை முயற்சி யூனியன் பிரதேசமான லடாக் பிரதேசத்தில் உள்ள லே மலைப்பகுதியில் தொடங்கவுள்ளதாக இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ புதிய ஆராய்ச்சி (ISRO Research For Human Extraterrestrials)

மனிதர்களை வேற்று கிரகங்களில் குடியேற்றம் செய்யும் இந்த திட்டம் இஸ்ரோ மற்றும் Human Space Flight Center, University Of Ladakh, AKKA Space Studio, Bombay IIT, Ladakh Autonomous Hill Development Council ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனை மூலமாக வேற்று கிரகங்களில் மனிதர்கள் (ISRO Research For Human Extraterrestrials) தங்கும்போது அங்கு ஏற்படும் சவால்களை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ எக்ஸ் வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது, சுதந்திர இந்தியாவின் முதல் ‘அனலாக் விண்வெளி பயணமானது யூனியன் பிரதேசமான லடாக் லே பகுதியில் தொடங்குகிறது’. இங்கு அமைக்கப்பட்டுள்ள அனலாக் ஆய்வு மையத்திற்கு ஹேப்-1 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரி சுதர்ஷன் கோபிநாத் அவர்கள் கூறும்போது இந்த அனலாக் ஆய்வு பணி மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதன் (ISRO Research For Human Extraterrestrials) சிக்கல்களை புரிந்துகொள்ள குறிப்பிடத்தக்க பணியாகும் என்றும், இந்த ஹேப்-1 திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து தகவல்களும் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வரும் 2030-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்வதற்கு தேவையான பணிகளில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் வரும் காலங்களில்  வேற்று கிரகங்களில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் போது அந்த கிரகத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆய்வக அமைப்பிலான குடில்கள் அமைக்கப்பட்டு மனிதர்கள் (ISRO Research For Human Extraterrestrials) தங்க வைப்பதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply