IT Park In Madurai : மதுரையில் பிரம்மாண்ட IT Park விரைவில் வருகிறது

சமீப காலங்களில் குறிப்பாக ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களின் IT துறையின் வளர்ச்சி வேகத்தால் தமிழ்நாடு ஆனது பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஆனது தமிழகம் அடைந்துள்ள பின்னடைவை சரி செய்ய களமிறங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு ஆனது முக்கியமாக பாரம்பரிய IT தொழில்நுட்பங்களில் மட்டுமல்லாமல் AI தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளது. 1996-2001-களில் போடப்பட்ட அடித்தளத்தை வைத்தே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை வாழ்ந்து வருகிறது. அடுத்து வருகின்ற 3 ஆண்டுகளில் புதிய திட்டங்களின் மூலம் IT துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உறுதி கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு இவற்றை மனதில் வைத்தே தற்போது சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் IT Park அமைக்க முடிவு எடுத்து உள்ளது.

IT Park In Madurai - மதுரை மக்களின் பிரம்மாண்ட ஐடி பார்க் கனவு நினைவாகிறது :

IT Park In Madurai : பல காலமாக மதுரை மக்களின் கனவாக இருந்து வரும் பிரம்மாண்ட IT Park (IT Park In Madurai) நிறைவேறப் போகிறது. டாடா நிறுவனம் ஆனது மதுரையில் ஒரு பிரம்மாண்ட IT Park-க்கை தொடங்க உள்ளது. இந்த IT Park-க்கிற்கான மாதிரி வரைபடத்தை டாடா நிறுவனம் தயாரித்து அதனை தமிழ்நாட்டின் டைடல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளது. இந்த IT Park ஆனது மதுரையின் மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக வரவுள்ளது. இந்த IT Park-ன் முதற்கட்டம் 5 ஏக்கரில் 600 கோடியில் உருவாக்கப்பட உள்ளது. இந்த IT Park-ன் இரண்டாம் கட்டம் மேலும் 5 ஏக்கரில் உருவாக்கப்பட உள்ளது.

இரண்டு IT Park மாதிரி படங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது :

இந்த இரண்டு IT Park-மாதிரி படங்களில் ஒன்று ட்வின் டவர் பாணியில் (Twin Tower Model) தலா 25 மாடிகள் கொண்ட இரண்டு டவர்கள் கட்டிட மாதிரி பாணியிலும் மற்றொன்று வட்ட வடிவ பாணியிலும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு IT Park-மாதிரி படங்களில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதனைத் தொடர்ந்து மதுரையில் விரைவில் ஐடி பார்க் (IT Park In Madurai) பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply