ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (ITBP Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

ITBP Recruitment 2024

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

இந்தோ திபெத்தியன் எல்லை பிரிவில் காலியாக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பதவிக்கு மொத்தம் 526 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி (Educational Qualification)

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் இந்த சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு (ITBP Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்களில் B.Sc, B.Tech, BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

இந்த சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 26 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் SC/ST பிரிவினருக்கும், 3 ஆண்டுகள் OBC பிரிவினருக்கும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

இந்த சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் இந்த சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பதவிக்கு (ITBP Recruitment 2024) உடல் தகுதி தேர்வு (Physical Test), எழுத்து தேர்வு (Written Test), மெடிக்கல் டெஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் இந்த சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பதவிக்கு தேர்வு கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date

இந்த சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு வரும் 14.12.2024 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. மேலும் விவரங்களுக்கு

https://recruitment.itbpolice.nic.in/rect/index.php என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply