Jackfruit Benefits in Tamil: பலாப்பழம் நன்மைகள் தீமைகள்

முக்கனிகளில் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே கிடைக்கும். பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. பலாப்பழம் தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது. உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. தமிழகத்தில் பண்ருட்டியில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பலாப்பழத்தில் உள்ள சில கலைவைகள் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள் மற்றும் எலும்பு இழப்பு போன்ற பல்வேறு நோய்களை குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன. மேலும் தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் ஹோமோசிஸ்டீன் அளவை குறைக்கிறது. இந்நிலையில் பலாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தற்போது காணலாம்.

பலாப்பழத்தின் நன்மைகள் (Jackfruit Benefits in Tamil)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பலாப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் C மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் நமது உடல் வலிமையாகிறது.

உடனடி ஆற்றல்

100 கிராம் பலாப்பழத்தில் 94 கிலோ கலோரி மற்றும் நல்ல கார்போஹைட்ரேட் உள்ளது. சாப்பிட்டவுடன் உடனடி ஆற்றலைத் தருகிறது. பலாப்பழத்தில் இருக்கும் சர்க்கரை ஜீரணமாக மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க

பலாப்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஆற்றலை உற்பத்தி செய்ய கரையக்கூடிய நார்ச்சத்து உடலால் விரைவாக உடைக்கப்படுகிறது. கரையாத நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

கண் பார்வையை மேம்படுத்துகிறது

வைட்டமின் A நிறைந்து காணப்படுவதால் பலாப்பழம் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் நீக்குகிறது. புற ஊதா கதிர்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் ஒளி அலைகளில் இருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இது விழித்திரையின் சிதைவைத் தடுத்து கண்புரை ஏற்படாமல் குறைக்கிறது.

இளமையாக வைத்திருக்க உதவுகிறது

பிரீ ரேடிக்கல்ஸ் செயல்முறை உடல் செல்களில் நடைபெறுவதால் இதனால் செல்கள் சேதமாகி வயதான தன்மையை ஏற்படுத்துகிறது. மாசுபாட்டினால் ஏற்படும் அதிக ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் போது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பலாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை அழிப்பதன் மூலம் வயதான செயல்முறை குறைகிறது.

தைராய்டை தடுக்கிறது

பலாப்பழத்தில் உள்ள காப்பர் தைராய்டு வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இது ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும், உறிஞ்சுதல் செயல்களை சீராக்குகிறது. இது தைராய்டு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுக்கிறது

பலாப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம் சிறுநீர் வழியாக அதிகமாக வெளியேறுவதை குறைக்கிறது. எலும்புகள் சம்மந்தமான நோய்களான ஆர்த்திரிஸ் மற்றும் ஆஸ்டிரோப்ரோசிஸ் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பலாப்பழத்தில் குறிப்பிடத்தக்க அளவு இரும்புச்சத்து இரத்த செல்களின் அளவை பராமரித்து அனீமியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இரும்பு வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்குகிறது. மேலும், பலாப்பழத்தில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் C மற்றும் காப்பர் இரத்தத்தின் தரத்தை பராமரிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply