Jackson Durai 2 First Look : சத்யராஜின் 'ஜாக்சன் துரை இரண்டாம் பாகம்' ஃபர்ஸ்ட் லுக்...

Jackson Durai 2 First Look :

சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜாக்சன் துரை இரண்டாம் பாகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சத்யராஜ், சிபிராஜ் மற்றும் பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜாக்சன் துரை’. இதை பி.வி.தரணிதரன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இதில் சத்யராஜ், சிபிராஜ் ஆகியோருடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைமைப்பாளர் சித்தார்த் விபின் இசைமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். 1940-ல் ஊட்டி அருகில் உள்ள கிராமம் ஒன்றின் பின்னணியை வைத்து கதை நடக்கிறது. பிரிட்டிஷ் கால கட்டத்தைக் கொண்டு வர, அக்காலகட்டத்தில் பயன்படுத்தபட்டப் பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் போல செட் அமைத்து படமாக்க உள்ளனர். இந்த நிலையில் ‘ஜாக்சன் துரை இரண்டாம் பாகம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் முந்தைய பாகத்தின் தொடர்ச்சியா அல்லது வித்தியாசமான கதைக்களமா என்பதை படக்குழு வெளியிடவில்லை. தற்போது இந்த போஸ்டரானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply