Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 2012 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி இந்திய அணிக்கு இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு சதம், 22 அரைசதம் என 3370 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் பந்து வீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் இதுவரை இந்திய அணிக்காக 323 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜா அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகள் பெற்று 1152-வது நாளாக (Jadeja Is Ranked 1152 In The ICC Rankings) முதலிடம் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சமீபத்தில் அடுத்தடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில், அவர்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வீரரான ரவீந்திர ஜடேஜாவும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட (Jadeja Is Ranked 1152 In The ICC Rankings) நிலையில், அவர் உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா 1152-வது நாளாக முதலிடம் (Jadeja Is Ranked 1152 In The ICC Rankings)
இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) வெளியிட்டுள்ள தரவரிசைப் புள்ளி பட்டியலில், ஆல்ரவுண்டர்கள் பிரிவில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 458 புள்ளிகளுடன் தொடர்ந்து 1152-வது நாளாக முதலிடம் பிடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் படைத்த சாதனையை முறியடித்துள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜா கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வாரம் மட்டும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக இருந்தார். பிறகு அந்த இடத்திற்கு ஜேசன் ஹோல்டர் வந்தார். அதன் பிறகு 2022-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மீண்டும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாறி முதலிடத்தை அவர் தக்க வைத்து வருகிறார்.
ரவீந்திர ஜடேஜா இந்த 1152 நாட்களில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 என்ற பேட்டிங் சராசரியில் 3 சதங்கள் மற்றும் 5 அரை சதங்களுடன் 1175 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அவர் 91 விக்கெட்டுகளை (Jadeja Is Ranked 1152 In The ICC Rankings) வீழ்த்தியுள்ளார். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாட உள்ளதால் அவரது தரவரிசைப் புள்ளி மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்த 2-வது இடத்தில் வங்கதேச ஆல்ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் உள்ளார்.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?