Jailer 2 : ஜெயிலர் 2 ஆம் பாகம் குறித்து தரமான அப்டேட் வெளியீடு

Jailer 2 :

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. நெல்சன் இயக்கிய இந்த படத்தை சன் பிக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது Jailer 2 ஆம் பாகம் குறித்து தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். டாக்டர் படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய நெல்சன், விஜய் நடித்த பீஸ்ட் படத்தை சொதப்பிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அப்போது தான் ரஜினியின் ஜெயிலர் திரைபடத்தில் நெல்சன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. பீஸ்ட் தோல்விக்குப் பிறகு நெல்சன் ஜெயிலரை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் நெல்சனை நம்பி அவருக்கு ஜெயிலரை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். ரஜினியின் நம்பிக்கை பலித்தது. அதன்படி ஜெயிலர் படத்தில் ரம்யா கிரிஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், மிர்னா மேனன் மற்றும் பலர் நடித்தனர். முக்கியமாக மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோ ரோலில் மாஸ் காட்டியிருந்தனர் . அதேபோல, அனிருத்தின் இசையும் ஜெயிலருக்குப் பங்களித்தது. எப்படியோ ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக மாறிய ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இதனால் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார் கலாநிதி மாறன். அப்போதே Jailer 2 உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதே ரஜினி, நெல்சன், அனிருத் கூட்டணியில் Jailer 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ரஜினியோ தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதையடுத்து தலைவர் 171 படத்திற்கு லோகேஷ் கனகராஜிக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்நிலையில் நெல்சனுக்கு Jailer 2 ஸ்கிரிப்ட் தயார் செய்ய படக்குழு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த நெல்சன், Jailer 2 ஸ்கிரிப்ட் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை மிர்னா மேனன் Jailer 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் குறித்த அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். ஜெயிலரில் மிர்னா மேனன் வசந்த் ரவியின் மனைவியாகவும், ரஜினியின் மருமனாகவும் நடித்து கவனம் பெற்றார். முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் வசந்த் ரவியை ரஜினி கொல்வது போல் இருந்தது. ஆனால் மிர்னா மேனன் கேரக்டரை முடிவு கொடுக்கவில்லை. இதனால் ஜெயிலர் 2ல் அவரது கேரக்டர் இருக்கும் என தெரிகிறது. அதேபோல் நெல்சனும் அவரது கால்ஷீட்டை வழங்கியுள்ளாராம். இது தொடர்பாக சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றில், நெல்சன் ஜெயிலர் 2 ஆம் பாகத்தின் ஸ்கிரிப்ட் வேளைகளில் பிசியாக இருப்பதாக கூறினார். மேலும் Jailer 2 ஆம் பாகத்தில் தான் நடிக்க போவதாகவும் கூறினார். இது ரஜினி ரசிகர்களை உற்சாக அடைய செய்துள்ளது. தலைவர் 171 முடிந்ததும் Jailer 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply