Jailer 3rd Single : அமர்க்களமாக வெளியாகும் ஜெயிலர் 3 வது பாடல்...

Jailer 3rd Single :

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 3வது படலானது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’ ஆகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, விநாயக், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இப்படத்தில் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில், “காவாலா” பாடல் ஜூலை 6 ஆம் தேதி வெளியானது. இந்த பாடல் எதிர்பாராத ஹிட் ஆனது மற்றும் யூடியூப்பில் 70 மில்லியன் பார்வைகளை கடந்தது. இதையடுத்து, இரண்டாவது பாடலான ‘Hukum’ பாடல் ஜூலை 18ஆம் தேதி வெளியானது. சூப்பர் சுப்பு எழுதிய இந்தப் பாடலின் வரிகள் ரஜினியின் மாஸை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. இந்தப் பாடலின் தொடக்கத்தில் ரஜினியின் குரலில் பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றிருந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. ஏறக்குறைய 4 வருடங்களுக்கு பிறகு ரஜினியின் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடலாக ‘ஜுஜுபி’ இன்று (ஜூலை 26.07.2023) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான போஸ்டரில் ரத்தக்கறை படிந்த அரிவாளை கையில் பிடித்தபடி புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply