Jailer Audio Launch Tickets : 15 நொடிகளில் காலியான டிக்கெட்கள்...

Jailer Audio Launch Tickets :

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்கள் 15 வினாடிகளில் 1000 இலவச டிக்கெட்கள் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். இந்த ஆக்‌ஷன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலாக ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டய கிளப்பியது. இந்த பாடலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டாவது பாடலான “ஹுக்கும்” பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில், ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி, படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ஜாக்கி ஷெராப், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்பதாக வீடியோவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக பட குழுவினர் அறிவித்தனர். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண 500 பேருக்கு தலா 2 அனுமதிச் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. நேற்று மதியம் முன்பதிவு தொடங்கும் என்றும் படக்குழு அறிவித்தது. அதன்படி, நேற்று மதியம் 1 மணிக்கு https:jailer.sunpictures.in/ என்ற இணையத்தளத்தில் முன்பதிவு தொடங்கியது. ஆனால் அந்த லிங்கை வெளியிட்ட 15 வினாடிகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது பல ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply