Jailer Audio Launch: ஜெயிலர் மேடையை தெறிக்கவிட்ட ரஜினி | ஜெயிலர் இசைவெளியீட்டு விழா...

அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் முழுமையான ஆடியோ தொகுப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிறையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து அனிரூத் இசையில் வெளியான காவாலா, Hukum, ஜுஜுபி ஆகிய மூன்று பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்பாடலை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

Jailer Audio Launch :

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் அதிரடியாக பேசியுள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ரஜினிகாந்த் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறாததால், அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் இதன்பிறகு இவர் சூப்பர் ஸ்டார் இல்லை எனவும், அடுத்தது யார் என்ற விவாதமும் ஏற்பட்டது. இதை எதிர்பார்த்து காத்திருந்த திரையுலக பிரபலங்கள் சிலர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று உற்சாகத்தில் உள்ளனர். மேலும், தற்போது அவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் பெற்று வருவதாகவும் கூறி வந்தனர். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் தான் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று புயலை கிளப்பினர்.

மேடையை தெறிக்கவிட்ட ரஜினி :

இதற்கெல்லாம் சேர்த்து ஜெயிலர் படத்தில் காவாலா, Kukum, ஜுஜுபி ஆகிய பாடல்களை நெல்சன் களமிறக்கிவிட்டார். இந்நிலையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியே சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனது ஸ்டைலில் பேசி பஞ்ச் கொடுத்துள்ளார். அதற்கு அவர், “என்னுடைய பெயருக்கு முன்னால் உள்ள சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்கிவிடுங்கள் என்று பல வருடங்களுக்கு முன்பே கூறினேன்”. அப்போது ரஜினி பயந்துவிட்டதாக சிலர் செய்தி பரப்பினர். தொடர்ந்து பேசிய ரஜினி, “நான் எதற்கும் பயப்படமாட்டேன், கடவுளுக்கும் நல்ல மனிதர்களுக்கும் மட்டுமே பயப்படுவேன். நல்லவர்களின் சாபம் நம்மை அழித்துவிடும். எனவே நல்லவர்களை காயப்படுத்த கூடாது, அவர்களுக்கு பயப்பட வேண்டும்” எனக் கூறி ஜெயிலர் மேடையை தெறிக்கவிட்டார். சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து தனக்கு பயமே கிடையாது என ரஜினி பதிலளித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் பேசிய ரஜினி எனக்கு மட்டும் மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், தற்போது இருப்பதை விட எங்கோ இருந்திருப்பேன், மதுப்பழக்கம் என்பது நானே வைத்துக்கொண்ட சூனியம், தயவு செய்து குடிப்பதை நிறுத்துங்கள். அம்மா, மனைவி உட்பட குடும்பத்தில் உள்ள அனைவருடைய வாழ்க்கையும் பாதிக்கும். குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை, நாம் நம்முடைய வேலையைச் செய்ய கொண்டே இருக்க வேண்டும்  என்று ரஜினி தன்னுடைய ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

அதேபோல் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் பேசுகையில், ‘ரஜினிக்கு போட்டி ரஜினிதான்’ ஆரம்பத்தில் இருந்து அவர் தான் சூப்பர் ஸ்டார். இந்த வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் அவர் தான் சூப்பர் ஸ்டார் எனக் கூறி ரசிகர்களை அலறவிட்டார். இதை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply