Jailer Censor Report: ஜெயிலர் திரைப்படம் குறித்து சென்சார் குழு சொன்ன விமர்சனம்...

Jailer Censor Report :

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இதையடுத்து, ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு சென்சார் குழுவினர் படக்குழுவை பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படம் மூலம் கம்பேக் கொடுத்து போல் தற்போது ரஜினியும் ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என ரஜினி ரசிகர்கள் உட்பட திரையுலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏனெனில் கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்கள் எதுவும் மெகா ஹிட் ஆகவில்லை. எனவே ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு வந்து பழைய ரஜினியாக வசூல் வேட்டை நடத்த வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசையாக உள்ளது. அதன்படி, ஜெயிலரைப் பற்றி நேர்மறையான விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே காவாலா, Hukum, ஜுஜூபி ஆகிய மூன்று பாடல்களும் வெளியாகி மாபெரும்  வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல்களை ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் ரீல்ஸ் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படம் ஆக்ஷன் படமாக இருந்தாலும் நெல்சன் ஸ்டைல் டார்க் காமெடி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Jailer Censor Report: இந்நிலையில், ஜெயிலரை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படம் குறித்த விமர்சனத்தை கூறியிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விமர்சனத்தின் படி ரஜினியின் வழக்கமான படத்தை போல் இப்படம் இல்லை இது முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. நெல்சன் திலீப் குமாரின் ஸ்டைலிஷ் டார்க் காமெடியில், ரஜினியை பார்ப்பதற்கே புதியதாக இருக்கிறது என்று அவர்கள் விமர்சனம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், படத்தை பார்த்துவிட்டு ரஜினியும் முழு திருப்தி அடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply