Jailer First Single Promo: ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கள் ப்ரோமோ வெளியீடு
நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள “ஜெயிலர்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவானது வெளியாகியுள்ளது.
அண்ணாத்தே’ படத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படமானது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தயாரிப்பில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சிறைச்சாலை கதைக்களம் கொண்ட இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்னன், மோகன்லால், சிவ ராஜ்குமார், யோகி பாபு, ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, விநாயகன் , வசந்த் ரவி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கடலூர், எண்ணூர், ஹைதராபாத், மங்களூர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் கேக் வெட்டும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
படம் முடிவடைந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு இசைமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோ வீடியோ 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 மணிக்கு வெளியானது.
அதாவது 2 நிமிடம் 27 வினாடிகள் உள்ள இந்த ப்ரோமோவில், அனிருத் விளையாட்டாக நெல்சனிடம் கலாட்டா செய்யும் காட்சிகலானது இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து ‘காவாலா ‘ என தொடங்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் படலானது வரும் ஜூலை 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.