Jailer Movie Crossed 200 Crore Collection In 3 Days :ஜெயிலர் படம் 3 நாட்களில் 200 கோடி வசூலை கடந்தது

Jailer Movie Crossed 200 Crore Collection In 3 Days :

  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர் ஆகும். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், யோகிபாபு, தமன்னா, ரம்யா கிருஷ்னன், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த் – நெல்சன் முதன்முறையாக இணைந்துள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து இப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

  இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற மொழி நடிகர் பட்டாளம் நடித்துள்ள இப்படம் கூடுதல் வசூலை ஈட்டி வருகிறது. மலையாள நடிகர் மோகன்லாலும், கர்நாடக நடிகர் ஷிவ் ராஜ்குமாரும் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைத் தாண்டி வசூல் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது. உலகளவில் முதல் நாளில் ரூ.100 கோடியை நெருங்கிய ‘ஜெயிலர்’, இரண்டாவது நாளில் ரூ.150 கோடியை தாண்டியது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘ஜெயிலர்’ படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி கிளப்பில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் படம் முதல் நாளில் ரூ.95.78 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.56.24 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.68.51 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் இப்படத்தின் மொத்த வசூல் உலகம் முழுவதும் (Jailer Movie Crossed 200 Crore Collection In 3 Days) ரூ.220.53 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் இந்தியாவில் முதல் வார இறுதியில் ரூ.120 – ரூ.150 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்திய அளவில் ‘ஜெயிலர்’ திரைப்படம் முதல் நாளில் (வியாழக்கிழமை) ரூ.48.35 கோடியும், இரண்டாவது நாளில் (வெள்ளிக்கிழமை) ரூ.25.75 கோடியும், மூன்றாம் நாளில் (சனிக்கிழமை) ரூ.33.75 கோடியும் வசூலித்துள்ளது.  4வது நாளான விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ‘ஜெயிலர்’ படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. வரும் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் ‘ஜெயிலர்’ படம் மேலும் பல கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்திய ‘விக்ரம்’ படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். விக்ரம் படம் சுமார் 450 கோடி ரூபாய் வசூலித்தது. ஜெயிலர் மூன்றே நாட்களில் 200 கோடியைத் தாண்டியிருக்கும் நிலையில், அடுத்த மூன்று நாட்களில்  திங்கள், செவ்வாய், புதன்  ஆகிய நாட்களில் வசூல் குறையாமல் இருந்தால் நிச்சயம் 400 கோடியை எட்டும் என்று குறிப்பிடப்படுகிறது. செவ்வாய்கிழமை சுதந்திர தினம் என்பதால் அன்றைய தினம் கூட கூட்டம் அதிகமாக இருக்கும். இப்படியே போனால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிச்சயம் ‘விக்ரம்’ படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply