Jailer Movie Review : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம்...

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். தற்போது படத்தின் விமர்சனத்தை காணலாம். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமான “ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயக், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒட்டுமொத்த திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸுக்காக காத்திருந்த நிலையில், இதற்கு முன் வெளியான பாடல்கள், இசை வெளியீட்டு விழா, டிரைலர் என அனைத்தும் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படம் சரியாகப் போகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இப்படம் மகிழ்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரஜினி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி ரசிகர்களுக்கு இன்று திருவிழா என்று தான் சொல்ல வேண்டும். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தலைவரின் தரிசனத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அவர்களின் இரண்டு வருட காத்திருப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஜெயிலர் படம் 9 மணிக்கு தான் வெளியாவதாக இருந்தாலும், பெங்களூரில் இப்படம் காலை 6 மணிக்கே வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து பல ரஜினி ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை காண பெங்களூருக்கு படையெடுத்தனர்.

இதனால் பெங்களூரில் டிக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜெயிலர் திரைப்படத்தை கிட்டத்தட்ட 1100 திரையில் திரைப்படத்தை திரையிட்டனர். இந்நிலையில் இன்று முதல் நாள் காட்சி துவங்கிய நிலையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ரஜினியின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து ஒரு திருவிழாவை போல் கொண்டாடினர். ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் பார்த்த ரஜினி ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Jailer Movie Review :

ஜெயிலரின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், குறிப்பாக ரஜினி மற்றும் யோகி பாபுவின் காட்சிகள் நகைச்சுவையாக இருப்பதாகவும் படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் சிலர் முதல் பாதியில் சென்டிமென்ட், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், அனிருத்தின் இசை வெறித்தனமாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இண்டெர்வெல் சீனில் வரும் ஆக்சன் பிளாக் செம மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல் ரசிகர்களும் படம் செமையாக இருப்பதாகவும், முதல் பாதி சிறப்பாக இருக்கும் நிலையில் இரண்டாம் பாதியில் ஒரு சர்ப்ரைஸான சிறப்பு தோற்றம் இருப்பதாகவும் அது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்டானது படத்திற்கு மேலும் பலமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயிலரில் ஒரு காட்சி கூட போர் அடிக்காது நெல்சன் தான் யார் என்பதை ஜெயிலர் திரைப்படம் மூலம் நிரூபித்துள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் FDFSஐ பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply