Jailer Movie Second Single : இரட்டை அர்த்தங்களுடன் ஜெயிலர் பாடல்...

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல், பல திரையுலகினரை தாக்கும் வகையில் இரட்டை அர்த்தங்களுடன் பாடல் வரிகள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயிலர் இரண்டாவது சிங்கள்

ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹுக்கும்’ பாடல் தற்போது வெளியாகி, தற்போது வரை 7.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலை சூப்பர் சுப்பு என்பவர் எழுதிருந்தார். இசைமைப்பாளர் அனிருத்தின் துள்ளல் இசையில் இப்பாடல் உருவாகியிருந்தது. ‘தலைவரு நிரந்தரம் அலப்பரை கெளப்புரோம்’ என்ற பாடல் வரியில் ‘ஹுக்கும்’ பாடல் தொடங்கியிருந்தது. இந்த பாடல் வரிகள் மற்ற தமிழ் நடிகர்களை தாக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இரட்டை அர்த்தங்கள்

ஜெயிலரில் வரும் முத்துவேல் பாண்டியன் என்ற ரஜினியின் பாத்திரம் மட்டுமின்றி அவரது உண்மை முகத்தையே இந்தப் பாடலில் வரிகளாக எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ‘பேர தூக்க நாலு பேரு அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு’ என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஒருவரை தாக்கி எழுதப்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதிருந்தே பேச்சு அடிபட்டு வருகிறது. நடிகர் ரஜினி எந்த விழாவிற்கு சென்றாலும் அவர் பேசும்போது அவருடைய வாழ்க்கையில் நடந்ததை பேசுவார், அப்படி இல்லை என்றால் யாராவது பேசும் போது கேட்ட கருத்துக்களை பேசுவார். அதே பழக்கத்தை தான் தற்போது விஜய்யும் பின்பற்றி வருகிறார். விஜய் உள்பட பல முன்னணி நடிகர்கள் பலரும் அவரது ஸ்டைல் மற்றும் கதாபாத்திரத்தை முன்மாதிரியாக வைத்து நடித்து வருகின்றனர்.விஜய் உள்ளிட்ட பிரபலங்களை தாக்கும் வகையில் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பாடல் வரியில் மூன்று தலைமுறைகளை குறிப்பிடும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறப்பட்டு, அரசியலில் இருந்து விலகி விட்டார் இதனால் இவரை ட்ரோல் செய்தனர். அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலர் இவரை இழந்தனர். இவர்களை தாக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளது. இந்த பாடல் வரிகளை ரசிகர்கள் தற்போது மீம்ஸ்களில் வைரலாகி வருகின்றனர். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply