Jailer Song In SPB Voice : SPB அவர்கள் AI மூலம் ஜீவன் பெற்று நம்மிடம் வலம் வருகிறார்...

Jailer Song In SPB Voice :

தற்போது AI மூலம் S.P.பாலசுப்ரமணியம் உயிர் பெற்றுள்ளார்.  ஏற்கனவே  S.P.பாலசுப்ரமணியம் அவர்  பாடிய பாடல்களால் நம்மோடு வாழ்ந்து வருகிறார். இப்போது AI மூலம் S.P.பாலசுப்ரமணியம் ஜீவன் பெற்று  நம்மிடம் வலம்  வந்து வாழப் போகிறார். அனிருத் இசையமைப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படத்திய ஜெயிலர் திரைப்படத்தின் பாடல்கள்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கலாவணி கண்ணையா, காவாலா, ஹுக்கும் மற்றும்  ரத்தமாரே ஆகிய பாடல்கள் மக்களிடையே மிகவும்  பிரபலமாகியுள்ளன.

குறிப்பாக  விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாரே என்ற  பாடல் அனிருத் இசையமைப்பில்  விஷால் மிஸ்ரா சிறப்பாக பாடி மிகப் பிரபலமாகியுள்ளது. இந்த மெலடியான பாடலினை S.P.பாலசுப்ரமணியம் அவர்கள்   பாடினால் எப்படி இருக்கும் (Jailer Song In SPB Voice) என்று AI விரும்பிகள் யோசித்தார்கள். அதன் விளைவாக   AI விரும்பிகள் அப்படியே  S.P.பாலசுப்ரமணியம் Version-னை உருவாக்கிவிட்டார்கள். AI  Version- லில் ரத்தமாரே பாடலினை கேட்கும் போது, உண்மையிலே S.P.பாலசுப்ரமணியம் அவர்கள்  உயிரோடு மீண்டும் வந்துவிட்டாரோ என்று தோன்றும். அவ்வளவு சுத்தமாக AI வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துள்ளார்கள்.

தற்போது S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் மூலம் மீண்டும் உயிர் பெற்றுள்ளார்:

பாடல்களால் அவர் ஏற்கனவே நம்மோடு வாழ்ந்து வருகிறார். இப்போது ஏஐ மூலம் வாழ போகிறார். இந்த ரத்தமாரே பாடல் மட்டுமல்லாமல், எந்த பாடல் எல்லாம் எஸ்பிபி பாடினால் நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அந்தப் பாடலைகளை எல்லாம் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில் (Jailer Song In SPB Voice) இனி கேட்க முடியும். அத்தனை தத்ரூபமாக AI  Version மூலம் கொண்டு வந்துவிட முடியும்

இனிவரும் காலங்களில் AI  Version மூலம் எந்த குரலும் அழியப்போவது இல்லை மற்றும்  எந்த உயிர் அழிந்தாலும் அதனை தத்ரூபமாக AI  மூலம் கொண்டுவந்துவிட முடியும். நாம் காண வேண்டியர்களையும் மற்றும் நாம் காண விரும்பும்  AI ஆனது  நம் கண் முன்னே நிச்சயமாக நிறுத்த போகிறது.

அதேநேரத்தில் இந்த  AI ஆனது  பெரும் சிக்கலையும் ஏற்படுத்த போகிறது.  பல மார்ப்பிங்ஐ தத்ரூபமாக  இந்த  AI மூலம் செய்ய முடியும் என்பதால் யாரை பற்றியும் எப்படிப்பட்ட வீடியோவையும் AI  இல் உருவாக்கி  சமுதாயத்தில் உலா விட முடியும். ஒரிஜினலை விட AI ஆனது  மிகவும் தத்ரூபமாக இருக்கும் என்கிற அளவிற்கு பிரமிக்க தகுந்த விதத்தில் வளர்ந்து வருகிறது.

எனவே AI கண்டுபிடித்தவர்கள், ஏற்படுத்த போகும் குழப்பத்திற்கும் ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மனிதன் AI இயந்திரனோடு சண்டை போடும் நிலை  ஏற்படும். எஸ்பிபியே மீண்டும் உயிரோடு வந்து பாடியதுபோல் மிகவும் தத்ரூபமாக இந்த ரத்தமாரே AI Version பாடல் இருக்கிறது. AI  இயந்திரன் என்னவேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு S.P.பாலசுப்ரமணியத்தின் இந்த ரத்தமாரே பாடல் ஒரு சிறந்த எச்சரிக்கை ஆகும்.

Latest Slideshows

Leave a Reply