Jailer Title Issue : நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் தலைப்பிற்கு சிக்கல்…

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் தலைப்பிற்கு சிக்கல் வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குனர் நெல்சன் திலீப் இயக்கி உள்ள ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ரம்யா கிரிஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், ஜீவிதா, ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், ஜீவிதா, மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியானது.

ஜெயிலரின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடித்து ரஜினி தற்போது ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவு சென்றுள்ளார். ஜெயிலரின் தீம் மியூசிக் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ரஜினியின் பிறந்தநாளான (டிசம்பர் 12) அன்று ரஜினியின் கதாபாத்திரமான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி முதல் பாடலாக ‘காவாலா’ வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் கலகட்டியது. இயக்குனர் மற்றும் படலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார்.

இந்நிலையில், ஜெயிலரின் இரண்டாவது பாடலான ‘ஹூக்கும்’ நேற்று (ஜூலை 17) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான முன்னோட்ட வீடியோ ரஜினி பஞ்ச் டயலாக்குகளுடன் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஜெயிலர் ரிலீஸுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஜெயிலர் படத்தின் டைட்டில் சிக்கலில் சிக்கியுள்ளது. அதாவது தமிழில் ஜெயிலர் என்ற பெயரில் படம் உருவானது போல் மலையாள சினிமாவிலும் ஜெயிலர் என்ற தலைப்பில் படம் உருவாகியுள்ளது. பீரியட் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தியான் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்றாலும், இந்த தலைப்பு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் மலையாளத்தில் படத்தின் தலைப்பை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது மலையாளத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்றி வைக்க வேண்டி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply