Jailer vs Leo Box Office Collection : 2023-ன் வசூல் மன்னன் ஜெயிலரா? லியோவா?

Jailer vs Leo Box Office Collection :

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படம்  மிஞ்சிவிட்டதா? முதல் நாள் வசூல் தொடங்கி தமிழ் சினிமாவில் 2023-ன் ஆண்டுக்கான வசூல் மன்னன் யார் (Jailer vs Leo Box Office Collection) என்பதையும் பார்க்கலாம். தியேட்டர்களில் மட்டுமே ரசிகர்களுக்கு விருந்தளித்து வந்த நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் இதற்கு முன்னதாக வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை லியோ மிஞ்சிவிட்டதா? சாதனை நாயகன் யார் என்ற கேள்விகளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர். இந்த ரேசில் யார் தான் வெற்றியாளர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. ‘Classic Pair’ ஆன த்ரிஷா மட்டுமல்ல படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும் கொண்டு தியேட்டரில் விருந்து வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். எத்தனை கேரக்டர்கள் வந்தாலும் அத்தனையையும் தூக்கி சாப்பிட்டு படத்தை சுமந்தது என்னவோ விஜய்யின் பார்த்திபன் என்கிற கதாபாத்திரம் தான். அனைத்தையும் தாண்டி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததால் படம் பெரிய அளவில் வசூலிக்காது என்று பேசப்பட்டது. ஆனால் அந்த பேச்சை முதல்நாளே முறியடித்து வசூல் சாதனை (Jailer vs Leo Box Office Collection) படைத்தது லியோ. உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.148 கோடி ரூபாய். ஆனால் அதற்கு சற்று முன்னதாக வெளியான நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் சுமார் ரூ.100 கோடி மட்டுமே.

முதல் வார வசூல் ஜெயிலர் vs லியோ :

Jailer vs Leo Box Office Collection : சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம்  கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியானது.  இப்படத்தின் முதல்நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டிய நிலையில் ஒரு வாரத்தில் ரூ.375 கோடியையும் 12 நாளில் சுமார் ரூ.510 கோடி மற்றும் 16 நாள் முடிவில் ரூ.525 கோடி ரூபாயை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான நடிகர் விஜய்யின் லியோ படம் முதல் நாளில்ரூ.148 கோடி வசூல் செய்தது. 7 நாள் முடிவில் ரூ.461 கோடி மற்றும் 12 நாள் முடிவில் ரூ.540 கோடியை வசூல் (Jailer vs Leo Box Office Collection) செய்ததாக தயாரிப்பு நிறுவனம் ‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ அறிவித்தது.

தமிழ்நாட்டில் வசூலில் யார் முதலிடம் :

முதலில் வெளியான ஜெயிலர் படமும் சரி பிறகு வெளியான லியோ படமும் சரி சர்வதேச அளவில் வசூல் வேட்டை செய்தன. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு படங்களும் சுமார் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டு வசூல் வேட்டையில் லியோவே வெற்றியை தட்டித் துக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் படம் ரூ.189 கோடியை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் லியோவோ ரூ.231 கோடி ரூபாயை வசூல் (Jailer vs Leo Box Office Collection) செய்துள்ளது. இந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்த பொன்னியின் செல்வன், படத்தை கீழே தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது லியோ படம்.

சர்வதேச வசூலில் லியோ ஆதிக்கம் :

ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.189 கோடியை வசூல் செய்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.84 கோடியும் கர்நாடகாவில் ரூ.63 கோடியும், கேரளாவில் ரூ.57 கோடியும் மற்ற மாநிலங்களில் ரூ.15.25 கோடியும் என இந்தியாவில் மொத்தமாக ரூ.409 கோடியை வசூல் செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளதால் மற்ற உலக நாடுகளில் மொத்தமாக ரூ.198 கோடியை வசூல் செய்தது. ஆகமொத்தம் ஜெயிலரின் ஒட்டுமொத்த வசூல் ரூ.607 கோடி என்கிறது புள்ளி விவர தரவுகள்.

லியோ படத்தின் ஒட்டுமொத்த வசூல் :

நடிகர் விஜய்யின் லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.231 கோடியை வசூல் செய்தது. மட்டுமல்லாது, ஆந்திராவில் ரூ.48 கோடி, கர்நாடகாவில் ரூ. 41கோடி, கேரளாவில் ரூ.60 கோடி மற்றும் மற்ற மாநிலங்களில் ரூ.41 கோடியை வசூல் செய்தது. இந்திய அளவில் லியோ படம் ரூ.421.50 கோடியை வசூல் செய்துள்ளது. நடிகர் விஜய்யும் ரஜினிக்கு சளைக்காது சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டுள்ளதால் மற்ற உலக நாடுகளில் ரூ.199 கோடியை வசூல் செய்துள்ளது. இதன்படி லியோவின் ஒட்டுமொத்த வசூல் ரூ.620.50 கோடியாகும்.

2023-ன் வெற்றியாளர் யார்?

2023- ன் ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் அதிகப்படியாக ரூ.350 கோடி ரூபாயை வசூல் செய்தது. அதையடுத்து வெளியான ஜெயிலர் ரூ.607 கோடியையும், லியோ படம் ரூ.620.50 கோடியையும் வசூல் செய்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ‘லியோ’ படம்தான் வசூல் மன்னன். ஓடிடி என்று பார்த்தாலும் இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை லியோ திரைப்படம்  செய்துள்ளது. எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத வரவேற்பாக அதிகப்படியான தொகைக்கு லியோ படம் விற்கப்பட்டுள்ளதாக படத்தின் லலித்குமாரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது (Jailer vs Leo Box Office Collection) குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply