Jama Movie Review : ஜமா திரைப்படத்தின் திரை விமர்சனம்

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் இசைமைப்பாளர் இளையராஜா இசைமைத்துள்ள ஜமா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் விமர்சனத்தை (Jama Movie Review) தற்போது காணலாம். தெருக்கூத்து கலையை கதையின் அடிநாதமாக வைத்து இயக்கி நடித்துள்ளார் பாரி இளவழகன். பஞ்ச பாண்டவர்களை மணந்த பாஞ்சாலியாக நடிக்கும் நாயகனின் பெயர் கல்யாணம். ஆனால் திருமணம் ஆகாத அளவுக்கு படத்தின் கதை, திரைக்கதையை செதுக்கிய பாரி இளவழகன் தனது நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். சினிமா வருவதற்கு முன்பே தெருக்கூத்து என்பது பல ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியம். மகாபாரதம், கர்ண மகாபிரபு, வல்லிதிருமணம் போன்ற பல நாடகங்கள் தெருக்கூத்து கலைஞர்களிடையே பிரபலமான ஒன்றாகும். அந்த தெருக்கூத்து கலையை படமாக்கி ரசிகர்களை கவரலாம் என்ற நம்பிக்கையில் சிறந்த படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன். இந்நிலையில், அதன் விமர்சனம் (Jama Movie Review) குறித்து இங்கே காணலாம்.

ஜமா கதைக்களம் :

திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகொண்டா பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பிரபல நாடகக் கம்பெனியாக இருந்து வருகிறது ஆலம்பனா ஜமா. இந்த குழுவின் வாத்தியாராக தாங்கல் தாண்டவம் (சேத்தன்) இருக்கிறார். எப்போதும் திரெளபதியாகவோ அல்லது குந்தியாகவோ நடிப்பவர் தான் நாயகன் கல்யாணம். கூத்தைப் பொறுத்தவரை எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதற்கேற்ற மரியாதையைக் கொடுப்பவர் கல்யாணம். பெண் வேடங்களில் தொடர்ந்து நடிப்பதால் கல்யாணத்தின் பேச்சு, பாவனை, உடல் மொழி என அனைத்தும் பெண்களாகவே பிரதிபலிக்கின்றன. ஆண்கள் எப்போதும் அவனை நக்கல் அடித்துகொண்டே இருப்பதால் பெண்களுக்கு நெருக்கமானவனாக இருக்கிறான் கல்யாணம்.

கல்யாணத்தின் இந்த குணத்தால், அவனுக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். அடுத்த முறை அர்ஜுனன் வேடம் போட்டு நடித்தால் தான் திருமணம் ஆகும் என்று கல்யாணத்தின் அம்மா ஒருபக்கம் அவனை வற்புறுத்துகிறார். இன்னொரு பக்கம் தாண்டவத்தின் மகள் ஜனா (அம்மு அபிராமி) கல்யாணத்தை காதலிக்கிறாள். கல்யாணத்தை பொறுத்தவரை அவனுக்கு இருப்பது ஒரே ஒரு ஆசைதான். தனது தந்தை தொடங்கி வைத்து அவர் கையால் பறிக்கப்பட்ட இந்த ஜமாவிற்கு தான் வாத்தியாராக வேண்டும், அதுதான் அவனுடைய ஒரே ஆசை. இந்த ஜமாவிற்கு கல்யாணம் வாத்தியாராக ஆனாரா? அர்ஜுணனாக அவதாரம் பூசினாரா என்பதே ஜமா திரைப்படத்தின் கதையாகும்.

Jama Movie Review :

பாரி இளவழகன் மிகச்சிறந்த நடிகராக நடித்திருப்பதை பார்க்கும்போது அவருக்கு நிச்சயம் விருதுகள் வந்து சேரும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்துக்குப் பிறகு சேத்தனுக்கு செம தீனி போட்டுள்ள கதாபாத்திரம் தான் தாங்கல் தாண்டவம். மனுஷன் மிரட்டி எடுத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தில் காதலியாக வரும் அம்மு அபிராமியின் நடிப்பும் கைதட்டல்களைப் பெறுகிறது. கலை வேலைகள் நன்றாக இருந்தாலும், வணிக ரீதியாக படம் ரசிகர்களை எப்படி திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்பதில் சவால் உள்ளது. மேலும், திரைக்கதையில் ஆங்காங்கே சில முரண்பாடுகளைக் காணலாம். முதல் பாதியில் மெதுவாகத் தொடங்கி சூடுபிடிக்கும் கதை, இரண்டாம் பாதியிலும் அதே மாதிரியான சிகிச்சை பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் போட்டுள்ள உழைப்பிற்கும் இந்த படத்திற்கு (Jama Movie Review) பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply