Jana Nayagan Poster Released : விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது

நடிகர் விஜய் நடித்து வரும் 69 வது படமான “ஜன நாயகன்” படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி (Jana Nayagan Poster Released) ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தளபதி விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திரையுலகில் நம்பர் 1 நடிகராக உள்ளார். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அவர், கடந்த ஆண்டு அரசியல் களத்தில் இறங்கிய அவர், அரசியல் பயணத்திற்காக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்துவதாக (Jana Nayagan Poster Released) அறிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசியல் வருகைக்கு தயாராகி வரும் விஜய், தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

ஜன நாயகன்

தளபதி 69 என்ற தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ‘நாளைய தீர்ப்பு’ என டைட்டில் வைக்கப்படும் என்று கூறப்பட்டது. இது விஜயின் முதல் படத்தின் தலைப்பு ஆகும். இந்நிலையில் தான் 76 வது குடியரசு தினமான நேற்று தளபதி 69 படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டது. படத்திற்கு ஜன நாயகன் என்று தலைப்பு (Jana Nayagan Poster Released) வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை மக்களும், அரசியல் கட்சியினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ஜன நாயகன் போஸ்டர் (Jana Nayagan Poster Released)

Jana Nayagan Poster Released - Platform Tamil

குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் லியோ, GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு நடுவே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியின் மேல் நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் (Jana Nayagan Poster Released) மிகவும் பிரபலமானது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடினர். அந்த புகைப்படத்தை போலவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அப்படியே இருந்தது. இதனை தொடர்ந்து 2 வது லுக் போஸ்டரில் நான் ஆணையிட்டால் என்ற வசனத்துடன் விஜய் சாட்டையை சுழட்டுவது போன்று காட்டப்பட்டுள்ளது.

இந்தப் திரைப்படத்தை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் மற்றும் பலரும் நடிக்கின்றனர். இசைமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் 69 வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இது விஜய்யின் (Jana Nayagan Poster Released) கடைசி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமூக பிரச்சனைகளை கமர்ஷியல் ரீதியாக ஆக்சன் படமாக வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர் எச்.வினோத், விஜய்யின் கடைசி படத்தை வலுவான திரைக்கதை மற்றும் அரசியல் கருத்துகளுடன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply