Japan Movie First Single : ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Japan Movie First Single :

நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ஜப்பான் படத்தின் ‘டச்சிங் டச்சிங்’ பாடல் (Japan Movie First Single) வெளியாகியுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ஜப்பான் ஆகும். பெரிய பட்ஜெட்டில் உருவாகும், கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஜப்பான் திரைப்படம் குறித்து கார்த்தி மனம் திறந்து பேசிய பொது. ஜப்பான் திரைப்படம் தர லோக்கல் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று படங்களும் கார்த்திக்கு பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அவருக்கு கை கொடுத்தது. இதனால் தற்போது அவர் நடித்து வரும் ஜப்பான் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Japan Movie First Single : ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் சிவகுமார், சூர்யா மற்றும் பலர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் டீசர் கடந்த 18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஜப்பான் படத்தின் பாடல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஆயுதபூஜை தினமான நேற்று ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல்  வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் முதல் பாடலான ‘டச்சிங் டச்சிங்’ பாடல் (Japan Movie First Single) நேற்று மாலை 7 மணி அளவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply