Japan Movie Teaser : ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியீடு

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஒரு டார்க் காமெடி படமாக ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது இந்நிலையில் இப்படத்தின் டீசர் (Japan Movie Teaser) வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பகுதியில் 200 குடிசைகள் கொண்ட பிரமாண்ட கிராமம் போல் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதன் பிறகு இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கவுள்ளது.

ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் சிவக்குமார் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் படத்தின் டீசர் (Japan Movie Teaser) வெளியாகியுள்ளது. இந்த டீசர் (Japan Movie Teaser) தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Japan Movie Teaser

யார் இந்த ஜப்பான்? என்ற அறிமுகத்துடன் டீசர் (Japan Movie Teaser) தொடங்குகிறது. ரூ.200 கோடி பணத்தை கொள்ளையடித்தவர், இந்தியாவிலேயே 180 வழக்குகளுடன் 4 மாநில காவல் துறைகளால் தேடப்படும் மனிதராக பில்டப் கொடுக்கப்படும் கேரக்டருக்கு பாடி லாங்குவேஜில் இருக்கிறார் கார்த்தி. அவருடைய உடை புதுமையாக இருந்தது. சுனில், விஜய் மில்டன், கே.எஸ்.ரவிக்குமார் நடுவில் வந்து செல்கின்றனர்.

கைதி படத்தில் பயன்படுத்தப்பட்ட அதே கொசு விரட்டி துப்பாக்கியை வைத்து இங்கேயும் கார்த்தி சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 1.24 நிமிடம் கொண்ட இந்த டீசரில் ஜப்பான் என்ற வார்த்தை 9 முறை உச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு டீசர் முழுக்க படம் கார்த்தியை சுற்றியே நகர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. கார்த்தியின் தங்கப் பற்கள், ‘கைதி’யில் பயன்படுத்திய இயந்திர துப்பாக்கி சர்ப்ரைஸ் கொடுக்கிறது. ‘எத்தனை குண்டுகளை வீசினாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாது’ என்ற இறுதி வசனம் கவனம் பெற்று வருகிறது. படத்தின் டீசர் (Japan Movie Teaser) ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply