Japan Movie Trailer Release Date : ஜப்பான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

  • Japan Movie Trailer Release Date : ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நடிகர்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
  • ஜப்பான் படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

Japan Movie Trailer Release Date : ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

Japan Movie Trailer Release Date : நடிகர் கார்த்தியின் 25-வது படமாக ஜப்பான் திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது. ஜப்பானின் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை (Japan Movie Trailer Release Date) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இப்படம் கார்த்தியின் 25வது படம் என்பதால் அவருடன் இதுவரை படங்களில் பணியாற்றியவர்களை அழைக்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்பது எங்கள் திட்டம் இல்லை. வெளியீட்டுத் திட்டம் எதார்த்தமாக நடந்தது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாகிறது. மொத்தம் 1500 முதல் 2000 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம். ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த முறையான அனுமதி பெற்றுள்ளோம். நேரு விளையாட்டு அரங்கில் எந்த அளவிற்கு நபர்களை அனுமதிக்க முடியுமோ அந்த அளவிற்கு நபர்களை அழைக்க உள்ளோம். மொத்தம் 7,000 நபர்களை அழைக்க உள்ளோம். இதைத் தாண்டி யாரும் அழைக்கப்படவில்லை. மேலும் காவல் துறை முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதிப்போம்.

மலையாளத்திலும், கன்னடத்திலும் தமிழ் மொழியில் மட்டுமே  திரையிடப்படுகிறது. ஏனென்றால் அங்குள்ள மக்கள் நம் மொழியைப் புரிந்துகொள்கிறார்கள். அதனால் பிரச்சனை இல்லை. இப்படத்திற்கு 9 மணி காட்சியே போதுமானது, தீபாவளிக்கு முன் வெளியாகும் பட்சத்தில் படத்திற்கு சிறப்பு காட்சிகள் தேவையில்லை. ஜப்பான் ஒரு வேடிக்கையான திரைப்படம். இதில் அரசியல் கருத்துகள் எதுவும் இல்லாததால் சென்சாரின் போது காட்சிகளை நீக்குவது போன்ற பிரச்சனைகள் இருக்காது. மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சரியாக செய்ததால் பிரச்சனை வராது என நம்புகிறேன்.

அந்தவகையில், படத்தில் முகம்சுழிக்க வைக்கும் வன்முறை இந்த படத்தில் இருக்காது. சித்தா, குட் நைட், டாடா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது போல், இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும். இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், நடிகர் விஷாலின் புகாரால் இனி தமிழகத்திலேயே பெற்று கொள்ளலாம் என்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பணிச்சுமையை குறைக்கிறது. விஷால் செய்த இந்த காரியம் பெரிய பலன் தரும். என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply