Japan Movie Trailer : ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Japan Movie Trailer :

நடிகர் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ படத்தின் ட்ரெய்லர் (Japan Movie Trailer) வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர்28) பிரமாண்டமாக நடைபெற்றது. நேற்று நடந்த விழாவில் ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் (Japan Movie Trailer) வெளியிடப்பட்டது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜப்பான்” ஆகும். கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், சுனில் வர்மா, விஜய் மில்டன், கே.எஸ்.ரவிக்குமார், பவா செல்லத்துரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கார்த்தியின் 25வது படமாக இருக்கும் அதே நேரத்தில் ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 28) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சூர்யா, தமன்னா, சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, எச்.வினோத், சுசீந்திரன், பா.ரஞ்சித், பி.எஸ்.மித்ரன், முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கார்த்தியின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஜப்பான் படத்தின் ட்ரெய்லரை (Japan Movie Trailer) நடிகர் சூர்யா வெளியிட்டார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, கார்த்திக்கு இப்படி ஒரு அடையாளத்தை கொடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு 20 வருடங்கள் முன்னாடி செல்ல வேண்டும். கமல் பூஜையுடன் படம் துவங்கியது. படத்தை பார்த்த ரஜினி, “வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை, கிடைத்ததை கார்த்தி பயன்படுத்திக்கொண்டார்” என வாழ்த்தினார்.

ஒரு அண்ணனாக என்னை விட கார்த்தி இப்படி இருக்க 4 பேர் தான் காரணம் மணிரத்னம் கிட்ட ஆரம்பித்த விதை என்பதால் அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். அடுத்ததாக கார்த்தியுடைய இந்த பயணத்திற்கு ஞானவேல் தான் காரணம். பருத்தி வீரன் படம் கொடுத்த இயக்குனர் அமீருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அதுபற்றி நானும் கார்த்தியும் அடிக்கடி பேசுவோம். இப்படி மூச்சு வாங்குதுல, கால் ஜான் வயித்துக்கு இப்படி கஷ்டப்படுறதை விட 4 பன்னிகுட்டி வாங்கி வேலை பார்க்கலாமே என்று நினைப்போம்.

தமிழ் சினிமாவில் எங்களுக்கு முக்கியமான படங்கள் தருவதற்கு ரசிகர்கள்தான் காரணம். கார்த்தி நடிக்க வந்த அப்புறம், என்னிடம் வந்து நான் உங்கள் தம்பி ரசிகன், உங்களை விட எனக்கு அவரைப் பிடிக்கும் என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும். வீட்டுக்கு வந்து சினிமாவைப் பற்றி அதிகம் யோசித்து அதிக மரியாதை கொடுப்பதும் கார்த்தி தான். நான் பி.காம் படித்துவிட்டு பிசினஸ்லாம் பண்ணிட்டு தான் சினிமாவுக்கு வந்தேன்.

ஆனால் கார்த்தி தான் என்ன செய்ய வேண்டும் என்று காத்திருந்து இந்த இடத்திற்கு வந்தார். அவர் அதில் உண்மையுள்ளவர். கார்த்தி 16 வருடங்களில் 50 படம் பண்ணிருக்கலாம். ஆனால் ஒரு படத்திற்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், இப்படிப்பட்ட படங்களை தான் எடுக்க வேண்டும் என்று நினைத்ததால் தான் 25வது படத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். இவரால் எப்படி எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க முடிகிறது என ஆச்சரியப்பட்டுள்ளேன்” என நடிகர் சூர்யா தெரிவித்தார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் (Japan Movie Trailer) மற்றும் சூர்யா பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Latest Slideshows

Leave a Reply