Jasprit Bumrah Comeback: பும்ரா எப்போது மீண்டும் இந்திய அணியில் விளையாடுவார்?

Jasprit Bumrah Comeback :

இந்திய அணியின் சீனியர் பவுலர் பும்ரா அவர்கள் கடந்த ஆறு மாத காலமாக காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். அவர் மீண்டும் காயத்தில் இருந்து குணமடைந்து எப்போது அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி நீண்ட காலமாக எழுந்து வருகிறது. பும்ராவின் காயம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ரோகித் ஷர்மா, அது பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை எனக் கூறியிருந்தார். இதனால் இதே நாளில் ஜெய்ஷாவிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காயம் காரணமாக ஓய்வு :

இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். கடைசியாக கடந்த வருடம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார். அவர் காயம் காரணமாக நீண்ட காலமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் ஓய்வெடுத்துக் கொண்டு அறுவை சிகிச்சை செய்தார். இதனால் கடந்த ஆறு மாத காலமாக ஓய்வில் இருந்து வருகிறார். இப்போது இந்திய தேசிய அகாடமியில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அது மட்டுமல்லாமல் அவர் ஒரு நாளுக்கு பத்து ஓவர் வீசி வருவதாக தெரிகிறது. சிறிது சிறிதாக பழைய பார்முக்கு திரும்புவதாக தெரிகிறது. அவர் இன்னும் முழு உடல் தகுதியை அடைவதற்கு பல பயிற்சி போட்டிகள் விளையாடி வருகிறார். அதில் பங்கேற்று சிறப்பாக விளையாடுவதாக கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அவர் களம் இறக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் பும்ரா கம்பேக் கொடுக்க இளம் வீரர்களுடன் சேர்த்து அனுப்பப்படலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம் :

இதனால் தற்போது பும்ரா குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பிய போது, அது குறித்து எங்களுக்கு இப்போது எந்த தகவலும் தெரியாது எனக்கு கூறி இருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்திய அணி மட்டுமல்லாமல் உலக அளவில் தரமான பவுலர் ஆக இருக்கக்கூடிய பும்ரா பற்றி இப்படி ஒரு பதிலை அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நாளில் இதே கேள்வியை ஜெய்ஷாவிடம் கேட்டபோது, பும்ரா அவர்கள் தற்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் தேசிய அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் சீக்கிரமாக இந்திய அணியில் விளையாடுவார் என்று தெரிவித்திருந்தார். இதனால் இந்திய அணியின் கேப்டனுக்கு தெரியாத தகவல்கள் கூட ஜெய்ஷாவுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply