Jawan 2 : ஜவான் இரண்டாம் பாகம் வருமா|அட்லீ அதிரடி பதில்

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியான திரைப்படம் ஜவான் ஆகும். இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளனர். திரையரங்கில் வெற்றிநடை போட்டுவரும் ஜவான் படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களை வசூலையும் குவித்து வருகிறது.

நடிகர் ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படம் உலக அளவில் ரசிகர்களை பெற்று வெற்றிநடை போட்டுவருகிறது. இந்த படத்தின் மூலம் அட்லீ, நயன்தாரா, இசைமைப்பாளர் அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஜவான் திரைப்படம் சில நாட்களிலேயே 700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளார் ஷாருக்கான். இந்தப் படம் அவருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Jawan 2 குறித்து அட்லீ :

இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் (Jawan 2) உருவாகும் என கூறப்படுகிறது. தனது படங்களில் எப்போதுமே Open – End க்ளைமாக்சே தான் வைத்திருப்பதாகவும் ஆனால் எந்தப் படத்திற்கும் இரண்டாம் பாகத்தை (Jawan 2) யோசித்து நான் இயக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் சூழ்நிலைகள் மேம்பட்டால், ஜவான் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என்றும் அட்லீ கூறியுள்ளார். இந்தப் படத்தில் Open – End வைத்துள்ளதால், இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்புடன் ரசிகர்களை சந்திப்பேன் கிரிக்கெட் வீரர் விக்ரம் ரத்தோர் வாழ்க்கை வரலாற்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளதால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புடன் விரைவில் ரசிகர்களைச் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

இதுவரை எடுத்துள்ள படங்களில் விஜய்யின் தெறி, பிகில், மெர்சல் என 3 படங்களின் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார் அட்லீ. இதையடுத்து தற்போது ஜவான் படத்தை ஹிட்டாக்கி பாலிவுட்டில் பிரமாண்ட என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை அடுத்து கரண் ஜோஹர் தயாரிப்பில் அடுத்தடுத்த படங்களை இயக்குள்ளார். இதற்காக அவருக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் மீண்டும் விஜய்யை அட்லீ இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அட்லியும் தனது சமீபத்திய பேட்டியில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஜவான் திரைப்படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் (Jawan 2) குறித்து அட்லீ அளித்த பேட்டி தற்போது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக உள்ளது. மேலும் விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றைத் திட்டமிட்டுள்ளதாக அட்லீ கூறியுள்ளது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply