Jawan Audio Launch Pre-Release Event : ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

Jawan Audio Launch Pre-Release Event

ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு (Jawan Audio Launch Pre-Release Event) விழாவானது நேற்று சென்னை, தாம்பரத்திற்கு அருகில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத் மற்றும் ஜவான் படக்குழுவினர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளாத நிலையில், சர்ப்ரைஸ் கொடுக்க கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜவான் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றனர். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத், பிரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்கலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால் அவரும் தளபதி 68 படத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுக்க அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிகிறது. சென்னையில் ஜவான் இசை வெளியீட்டு விழா நடந்ததால் (Jawan Audio Launch Pre-Release Event) முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கும் வரை அதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், திடீரென உலக நாயகன் கமல் ரசிகர்கள் முன் தோன்றி ஆச்சர்யப்படுத்தினார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் நேரில் வரமுடியாத காரணத்தால் வீடியோ கால் மூலம் நேரலையில் பேசினார். ஜவான் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்த கமல், இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்றார். மேலும், ஷாருக்கான் இந்திய அன்பின் அடையாளம் என பாராட்டினார். அதேபோல் பாலிவுட் சென்று படத்தை இயக்கியுள்ள அட்லியையும் கமல் பாராட்டினார். அட்லியின் முதல் படமான ‘ராஜா ராணி’ பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை பற்றிக் குறிப்பிட்ட கமல், அவரது வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்படுவதாகக் கூறினார். மேலும் கமல்ஹாசன் விஜய் சேதுபதி மற்றும் அனிருத் பற்றி அன்பாக பேசியது அங்குள்ள ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசிய வீடியோ அவரது ரசிகர்களால் ட்ரெண்டாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply