Jawan Question And Answer Session : காதலிக்காக இலவச டிக்கெட் கேட்ட ரசிகர்

Jawan Question And Answer Session :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாடல் ‘வந்த இடம்’ ஏற்கனவே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் அடுத்த பாடலான ‘ஹயோடா’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. ஜவான் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்ட சில மணிநேரங்களில், ட்விட்டர் பக்கத்தில் கேள்வி பதில் (Jawan Question And Answer Session) நிகழ்ச்சியை நடத்தினர். கேள்வி பதில் நிகழ்ச்சியில் படம் குறித்தும், படத்தில் நடித்த நடிகர்கள் குறித்தும் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டனர். நடிகர் ஷாருக்கான் அனைத்து கேள்விகளுக்கும் கூலாக பதிலளித்தார்.

Jawan Question And Answer Session : இதில் ஒரு ரசிகர் ஷாருக்கானிடம், “எனது காதலிக்கு ஜவான் இலவச டிக்கெட் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். மேலும் நான் ஒரு வீணாபோன காதலன்” என்றும் கூறினார்.

இந்த கேள்விக்கு (Jawan Question And Answer Session) பதிலளித்த நடிகர் ஷாருக்கான், “அனைவருக்கும் அன்பை மட்டுமே இலவசமாக அள்ளி கொடுப்பேன். காதல் என்று வரும்போது நீங்கள் மிகவும் மலிவாக நடந்துகொள்ளாதீர்கள். உங்கள் காதலிக்காக டிக்கெட் வாங்குங்கள். உங்கள் காதலியை ஜவான் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று பதிலளித்தார். இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply