Jawan Shoot Wrap: முடிவுக்கு வந்த ஜவான் படப்பிடிப்பு

ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து ஜவான் திரைப்படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஷாருக்கான் தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த இயக்குனர் அட்லீ ஜவான் படத்தை இயக்குகிறார். ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பை வெளியிடும் போதே படம் வெளியாகவும் தேதியை படக்குழு அறிவித்தது. அதன்படி இந்த படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அட்லி ஜவான் படத்தின் படப்பிடிப்பை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 2ஆம் தேதி ஜவான் வெளியாக வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அட்லீ மீது ஷாருக்கான் கோபமாக கோபம் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அட்லீ படப்பிடிப்பை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இனி தொடங்க உள்ளது. இந்த பணிகளும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏற்கனவே கூறியது போல் ஜவான் படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜவான் படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

ஜவானின் புதிய வெளியீட்டு தேதியை தற்போது இயக்குனர் அட்லீ முடிவு செய்துள்ளார். அதன்படி அக்டோபர் 19ஆம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு ஜவான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதே தேதியில் விஜய்யின் “லியோ” படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட்டிலும் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஜவான் படத்துக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே ஜவான் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியை பெறும் என்று ஷாருக்கான் எதிர்பார்க்கிறார்.

Latest Slideshows

Leave a Reply