Jayalalithaa's AI - "மக்களுக்காக நான்" ஆடியோ கிளிப்பை அதிமுக வெளியிட்டது

"மக்களுக்காக நான்" - Jayalalithaa's AI :

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் உறுதி செய்யாத நிலையிலும் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக தொடங்கிவிட்டது. அதிமுக AI தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பேசுவது போல ஆடியோவை (Jayalalithaa’s AI) உருவாக்கி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு, பிரச்சார வியூகங்கள் உள்ளிட்டவற்றிற்கு தனித்தனியாக குழுக்களை அமைத்து முழுவீச்சில் பணியாற்றத் தொடங்கியுள்ளன.

இந்த தேர்தலிலும் திமுக தலைமையில் ஏற்கனவே உள்ள அதே கூட்டணி களம் இறங்குகிறது. புதிதாக திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய உள்ளதாக தெரிகிறது. இந்திய ஜனநாயகக் கட்சி பாஜகவில் இணைந்துவிட்டதால் திமுக கூட்டணியில் ஜனநாயகக் கட்சி இல்லை. விரைவில் திமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன (காங்கிரஸ் உட்பட). சிறிய கட்சிகள் ஆன புரட்சி பாரதம் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ போன்றவை மட்டுமே அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. அதிமுக கட்சி ஆனது தேமுதிக, பாமக மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தனது கூட்டணியை விரைவில் உறுதி செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பரப்புரை - ஜெயலலிதா AI ஆடியோ :

ஒருபுறம் கூட்டணி பேச்சுகள் இருக்க, அதிமுக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் பரப்புரைகளை அதிமுக ஆனது தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரலில் AI தொழில்நுட்பத்தில் (Jayalalithaa’s AI) உருவாக்கப்பட்டுள்ள ‘மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்ற ஆடியோ ஆனது வெளியிடப்பட்டது.

ஜெயலலிதாவின் குரலில் AI தொழில்நுட்பத்தில் (Jayalalithaa’s AI) உருவாக்கப்பட்டுள்ள ஆடியோவில், அனைவருக்கும் வணக்கம். உங்கள் ஜெ.ஜெயலலிதா நான் பேசுகிறேன். மக்களுடன் பேசுவதற்கு ஒரு உன்னத வாய்ப்பை வழங்கி இருக்கும் இந்த AI தொழில்நுட்பத்திற்கு எனது நன்றி. நம்முடைய அதிமுக கழகம் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. நமது அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மடிக்கணினி, அம்மா உணவகம் என பலப் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்கள் இந்தச் சாதனைகளுக்காகவே அ.தி.மு.கவை ஆதரித்தார்கள். தற்போது ஒருபுறம் மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது மற்றும் மாநில அரசோ ஊழலுக்கு வித்திடும் திராணியற்ற ஆட்சியை நடத்தி வருகிறது.

தமிழக நலனுக்கு எதிராக மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தில் ஆளும் அரசும் உள்ளனர். இன்று என் பிறந்தநாளில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது, மீண்டும் அதிமுகவின் மக்களாட்சி அமைய வேண்டும். மக்களால் நாம் மற்றும்  மக்களுக்காகவே நாம். எனவே நம் அதிமுக கழகத் தொண்டர்கள் அனைவரும் என் வழி நின்று தலைமை பொறுப்பேற்றிருக்கும் எனது சகோதரர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதிமுகவை வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களால் நாம் மற்றும்  மக்களுக்காகவே நாம் என ஜெயலலிதா குரலில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Latest Slideshows

Leave a Reply