Jayam Ravi Advice To Students : தேர்வில் தோற்றால் தப்பில்லை

Jayam Ravi Advice To Students :

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே எதிர்காலம் உங்களைத் தேடி வரும். நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் நீங்கள் வாழ்க்கையில் தேர்ச்சி பெறால் போனால் தான் தப்பு. கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவர் வரும்போது அரங்கத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே (Jayam Ravi Advice To Students) சிறப்புரையாற்றினார், காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அவர், நீங்கள் அனைவரும் எனக்கு உறவாக இருக்கிறீர்கள் என்று கூறினார். வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள் இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களை தேடி வரும், உன்னைத் தேடி வரும். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறால் போனால் தான் தப்பு என்று (Jayam Ravi Advice To Students) கூறினார்.

காதலர் தினம் குறித்து அவரிடம் கேட்டபோது, ​​”18 வருட நினைவுகளை நினைத்துப் பார்த்தால் 18 வயதில் ஒரு அப்பாவித்தனம் இருக்கும். இது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று அனைவரையும் மதிக்க வைக்கிறது என்றார். 18 வயதில் ரசித்த காதல் பாடல் எது என்று கேட்டதற்கு, சிங்கிள் சைட் லவராக இருந்தபோது பிடித்த பாடல் ‘மஞ்சம் வந்தா தென்றலுக்கு’ என்று பதிலளித்து அந்த பாடலை பாடினார். திருமணம் பற்றிய கேள்விக்கு, ஏன் திருமணம் செய்கிறோம் என்றால் உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழ்ந்த பெண் சொல்ல வேண்டும். அதுதான் வாழ்க்கை எனக் கூறினார்”. பின்னர் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேடையில் நடனமாடினார்.

இந்த விழாவில் ஜெயம்ரவி நடித்துள்ள சைரன் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. இதுபற்றி ஜெயம் ரவி பேசுகையில், “சைரன் அப்பா-மகள் பாசத்தை சொல்லும் படம். இது அப்பாக்களுக்கு 15 ஆண்டுகளாக நடக்கக்கூடிய கதை. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார். மேலும் இரண்டு கதாபாத்திரங்கள் போல் பேசி அசத்தினார். அவர் சைரன் மற்றும் பொன்னியின் செல்வன் டயலாக்கில் நடித்தார். பின்னர் மாணவர்கள் சந்தோஷ் சந்தோஷ் என்று கோஷமிட்டனர். அதன்பின் சைரனின் 10 வினாடி காட்சிகள் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவைக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சைரன் மிக முக்கியமான படம். குடும்பத்துக்காக இந்தப் படத்தைத் செய்துள்ளேன். இந்தப் படம் எனக்கு சவாலாக இருந்தது. 15 ஆண்டுகால வித்தியாசத்தை காட்டியுள்ளோம். எனவே இந்தப் படம் ஒரு ஆர்கானிக் ஆக வந்துள்ளது” என்றார்.

Latest Slideshows

Leave a Reply