Jayam Ravi Separated From His Wife : ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிந்தார்

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜெயம், M.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தீபாவளி, உனக்கும் எனக்கும், தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன், எங்கேயும் காதல், கோமாளி உள்ளிட்ட வித்தியாசமான கதை கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவின் கனவுப் படமான மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்தார். இதைத்தொடர்ந்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

திருமண வாழ்க்கை :

சினிமா வாழ்க்கையைப் போலவே தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, ஆடை வடிவமைப்பாளர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, தொடர்ந்து ஜோடியாக இருக்கும் படங்களை வெளியிடுவதில் வழக்கமாக இருந்தார். ஜெயம் ரவியும் அப்படித்தான். சினிமா நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளும் இந்த ஜோடி ஒருவரையொருவர் அன்புடன் கிண்டல் செய்யும் வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகும். இவ்வளவு இனிமையான திருமண வாழ்க்கையில், திடீரென்று ஒரு நாள் ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை நீக்கினார். இதனால் இவருக்கும், மனைவிக்கும் இடையே ஒருவித மனஸ்தாபம் ஏற்பட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி ஆர்த்தியை ஆழ்ந்து யோசித்து விவாகரத்து (Jayam Ravi Separated From His Wife) செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Jayam Ravi Separated From His Wife - ஜெயம் ரவியின் விளக்கம் :

“வாழ்க்கை என்பது வெவ்வேறு அத்தியாயங்களைக் கொண்ட பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரை இல்லா இடங்களிலும் பார்த்து வருபவர்களும், திரை துறை நண்பர்கள், பத்திரிகை, ஊடகத் துறை மற்றும் சமூக ஊடகத் துறையைச் சேர்ந்த எனது நண்பர்கள், எனது ரசிகர்கள் அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சித்து வருகிறேன். இதனால், ஒரு செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்துகொள்ளும் கட்டாயத்தில் உள்ளேன். பலநாள் யோசனை மற்றும் முடிவுக்கு பிறகு, எனது மனைவி ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். இந்த முடிவை என்னுடன் இருப்பவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டது. 

இந்த தருணத்தில் எனது மற்றும் என்னை சார்ந்தவர்களின் தனியரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு என்னுடைய சொந்த முடிவு, இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிப்பதே எனது முன்னுரிமை. நான் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளித்துவரும் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி என ஜெயம் ரவி தனது அறிக்கையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிய காரணம் :

ஜெயம் ரவி நடிக்கக்கூடிய படங்களில் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரும் அதிகமாக தலையிடுவதால், இந்த தனிப்பட்ட காரணங்களால் திரை துறையில் வெற்றிபெற முடியாததாகவும், இந்த குழப்பம் விவாகரத்தில் (Jayam Ravi Separated From His Wife) முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Latest Slideshows

Leave a Reply