Jayam Ravi Who Reassured The Fan : கடுமையாக கோவப்பட்ட ரசிகர் | சமாதானப்படுத்திய ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் 16/02/2024 அன்று ‘சைரன்’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலை பதிவிட்டுள்ளது (Jayam Ravi Who Reassured The Fan) இணையத்தில் வைரலாகி வருகிறது. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்தவர் ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா, த்ரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி தனி ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் எதுவும் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில், ஜெயம் ரவியின் ‘சைரன்’ படம் வெளியாகியுள்ளது. அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள ‘சைரன்‘ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

Jayam Ravi Who Reassured The Fan :

இந்நிலையில், மதுரை திரையரங்கில் ‘சைரன்’ படத்தைப் பார்த்த ஜெயம் ரவி, அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் செல்ஃபி எடுக்க முடியாத ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில், ‘உங்களுடன் செல்ஃபி எடுக்க மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் முடியவில்லை. உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டும் செல்ஃபி எடுத்துக்கொண்டீர்கள். இது எனக்கு மிகவும் மோசமான நாள். உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவி அவரது பதிவை பார்த்த உடனேயே ரசிகரை (Jayam Ravi Who Reassured The Fan) சமாதானப்படுத்தியுள்ளார். அதாவது ரசிகரின் பதிவிற்கு ஜெயம் ரவி பதில் அளித்துள்ளார், “மன்னிக்கவும் சகோதரர். 16/02/2024 அன்று மட்டும் சுமார் 300 பேருடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நான் உங்களை எப்படி மிஸ் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எதுவும் பிரச்சனை இல்லை. சென்னை வாங்க செல்ஃபி எடுத்துக்கலாம். அன்பை பரப்புங்கள், வெறுப்பு வேண்டாம்” என்று அவர் தனது பதிவில் (Jayam Ravi Who Reassured The Fan) குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர், உடனடியாக அவர் பதிவிட்ட பதிவை நீக்கிவிட்டார். இதனிடையே ஜெயம் ரவி தனது ரசிகர்களை கூலாக கையாண்டு பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Latest Slideshows

Leave a Reply