
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
JCB Toughphone Max: என்னது 12200mAh பேட்டரியா? மிரண்டு போகும் வாடிக்கையாளர்கள்!
JCB Toughphone Max-ன் Strong ஆன மெட்டல் :
30 நாட்கள் தாங்கும் 12,200mAh பேட்டரி, புயலைக்கூட தாங்கும் மெட்டல் பாடி, நீருக்கடியில் வேலை செய்யும் கேமரா என அந்த போன் வலிமையானது. உலகின் முதல் இவ்வளவு வசதி கொண்ட தொலைபேசி.
JCB பற்றி யாருக்கும் சொல்லத் தேவையில்லை. கனரக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து எந்தப் பொருள் உருவாக்கப்பட்டாலும், அது மிக உயர்ந்த தரத்தில் மட்டுமே இருக்கும்.
இது நீடித்த தன்மையையும் கொண்டுள்ளது. JCB Tough phone Max Specifications என பல அதீத அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மழை, வெயில், புயல், குளிர் போன்றவற்றைத் தாங்கும் உலோக உடலை இந்த போன் கொண்டுள்ளது. உண்மையில், இது போன்று வேறு எந்த ஃபோனும் உருவாக்கப்படவில்லை.
JCB Toughphone Max Specifications:
இந்த போன் 5ஜி மாடல். மேலும் 6.7 இன்ச் முழு HD பிளஸ் (FHD+) IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. போனின் பின்புற கேமரா நான்கு அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளது. இது 48MP பிரதான + 16MP அல்ட்ரா-வைட் கேமரா + 2MP மேக்ரோ கேமரா + 0.3MP டெப்த் கேமராவுடன் வருகிறது. 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
JCB Toughphone Max 30 நாட்கள் பேட்டரி பேக்கப் :
இந்த ஃபோன் 12,200mAh இன் பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 30 நாட்கள் தொடர்ந்து பேக்கப் கிடைக்கும். 8 gb RAM மற்றும் 256 gb ROM வசதி கொண்டது. இது இரட்டை சிம் கார்டு போர்ட்டுடன் வருகிறது.
IP68 (water safety ) தரம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெட்டல் பாடி ராணுவ உபகரணங்களுக்கு ஈடானது. 1.8மீ ஆழமான கடல், ஏரி, குளம், குளம் என எது விழுந்தாலும் அது பல மணி நேரம் நீடிக்கும்.
2 வருட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. முழு தொலைபேசியும் உலோக உடலால் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரை 600 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62,530) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது. முதலில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வருகிறது. அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.