Jigarthanda Double X Box Office Collection : வசூலை குவிக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

Jigarthanda Double X Box Office Collection :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் ஆகிய இரண்டும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இப்படம் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் நவம்பர் 10ஆம் தேதி வெளியானது. இரண்டு படங்களின் மீதும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பார்வையாளர்களுக்கு முழுமையான சினிமா அனுபவத்தை அளித்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் (Jigarthanda Double X Box Office Collection) சாதனை படைத்து வருகிறது. யானைகள், வாய்மொழிக் கதைகள், காட்டில் வாழும் மனிதர்கள், அரசியல், சினிமா என்று ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் மக்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது. பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் ஒப்பனை ஆகியவை படத்தின் முக்கிய பிளஸாக அமைந்துள்ளது.

Jigarthanda Double X Box Office Collection : ரஜினியை ரெஃபரன்ஸாக வைத்து இந்திய சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ என்ற டேக் லைனுடன் உருவான இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் குழுவினர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு படக்குழுவினர் பிசியாக பேட்டி கொடுத்து வருகின்றனர். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் படத்தின் தொடக்க நாள் வசூலை விட (Jigarthanda Double X Box Office Collection) அடுத்தடுத்த நாட்களின் வசூல் அதிகரித்தது. இப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 35 கோடி வசூல் (Jigarthanda Double X Box Office Collection) செய்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஜகமே தந்திரம் மற்றும் மகான் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டன. இதனால் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் 4 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 100 திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply