Jio To Invest In Tamil Nadu : ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு

Jio To Invest In Tamil Nadu :

தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியாத ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி காணொளி வாயிலாக, “தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜியோ நிறுவனம் ஆனது தற்போது தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடியை முதலீடு (Jio To Invest In Tamil Nadu) செய்துள்ளது.

எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் ஜியோ நிறுவனம் ஆனது தொடர்ந்து முதலீடு செய்யும். தற்போது தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழகம் ஆனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தமிழகத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Jio To Invest In Tamil Nadu : ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு மூலம், தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் 35 மில்லியன் சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் புரட்சியின் மூலம் கிடைத்துள்ள பலன்களை வழங்கும். 1300 சில்லறை விற்பனை அங்காடிகள் ரிலையன்ஸ் சார்பில் திறக்கப்பட உள்ளது. அடுத்த வாரம் கனடாவின் Brookfield Assest Management மற்றும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட Digital Reality ஆகியவற்றுடன் ஜியோ நிறுவனம் (Jio To Invest In Tamil Nadu) கைக்கோர்த்து தமிழகத்தில் உலகத்தரத்தில் டேட்டா சென்டர் ஒன்றை திறக்க உள்ளது.

தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு 400 ஏக்கரில் 'வின்பாஸ்ட்' தொழிற்சாலை :

வியட்நாமில் உள்ள உலகின் முன்னணி மின்வாகன தயாரிப்பு நிறுவனமான ‘வின்பாஸ்ட்’, தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலை தொடங்குவதை உறுதி செய்துள்ளது. இந்த ‘வின்பாஸ்ட்’ நிறுவனம் ஆனது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் குழுமங்களில் ஒன்றான, ‘வின்குரூப்’ பால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ‘வின்பாஸ்ட்’ நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் செயல்பட்டு வந்த, ‘போர்டு’ நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் மின்சார கார் தயாரிக்க முதலில்  திட்டமிட்டது. ஆனால் அந்த இடம் ‘வின்பாஸ்ட்’ நிறுவனத்திற்கு   கிடைக்கவில்லை. இதனால்  ‘வின்பாஸ்ட்’ நிறுவனம் ஆனது தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க ஆர்வம் காட்டவில்லை.

இந்த ‘வின்பாஸ்ட்’ நிறுவன முடிவு ஆனது தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும், வின்பாஸ்ட் நிறுவன அதிகாரிகளிடம் தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘வின்பாஸ்ட்’ நிறுவனம் தற்போது சென்னையை போல் துறைமுக வசதி உடைய தூத்துக்குடி மாவட்டத்தில், 400 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது.

இந்த 2024 நடப்பாண்டில் தொழிற்சாலை கட்டுமானம் ஆனது துவங்கும்.  தூத்துக்குடியில் இந்த நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்வது, இருதரப்பினருக்கும் பொருளாதார நன்மைகளை அளிப்பதுடன், இந்திய பொருளாதார கூட்டாளியாகவும், தமிழ்நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பாளராகவும் வியட்நாம்  இருக்கும் என வின்பாஸ்ட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Latest Slideshows

Leave a Reply